ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 4

4

 

 

தான் செந்தூரார் குரூப்ஸூக்கு எதிராக டீலிங் எடுத்த கப்பலின் பாகங்களை உடைத்தெடுக்க போதுமான ஆட்கள் வசதி எதுவும் தற்போது ஆரனிடம் இல்லை.

 

இவன் இம் என்று சொன்னால் ஒரு படையே மும்பைலில் இருந்து வர காத்திருக்க.. இங்கே திருச்செந்தூரில்

சட்டென்று வெளியாட்களை யாரும் உள்ளே அனுமதித்து விடமாட்டார்கள். அவரவர்களுக்கு என்று தனித்தனியே அமைப்புகளும் சங்கங்களும் இருக்கிறது.

 இவன் ஏற்கனவே அதிலும் ஆன்லைன் மூலமாகவே உறுப்பினராக சேர்ந்து இருந்தான். பத்தோடு பதினொன்று அத்தோடு இவன் ஒன்று என்று நினைத்து அவர்களும் இவனை பெரிதாக கருதாமல் உறுப்பினராக்கி இருந்தனர்.

 

இப்போது இங்குள்ள ஆட்களை அறிந்து கொள்வதற்காகவும் இவனை பற்றி அவர்களுக்குத் தெரிய வைக்கவும் தான் இந்த ஏல ஏற்பாடு.

 

“சார் இந்த ஏல ஏற்பாட்டை நீங்க ரெண்டு விதமா செய்யலாம். ஒன்னு முழுசா இதுக்கு மேல கொஞ்சம் இலாபம் வைத்து அப்படியே இந்த கப்பலை முழுசா ஏலத்துக்கு விட்டுவிட்டு தொல்லை முடிஞ்சதுன்னு நீங்க அடுத்த டீலிங் பார்க்க போகலாம். இல்லைனா இந்த கப்பல் உடைப்பதற்கான ஏலத்தை மட்டும் விட்டுடலாம். அதுக்குன்னு சில கம்பெனிஸூம் ஆளுங்களும் இருக்காங்க.. அந்த வேலையை மட்டும் செஞ்சு கொடுத்திட்டு போய்டுவாங்க.. அதன் பிறகு அதன் பாகங்களை நீங்க விற்கலாம் இல்லை வேறு எதற்காகவும் உபயோகப்படுத்தவும் செய்யலாம்.. எதுக்கும் நம்ம கிட்ட ஆள் இருக்காங்க” என்று எடுத்துரைத்தான்.

 

 

இதற்குத்தான் ஆரன் பென்னியை தேர்ந்தெடுத்தது. இரண்டு மூன்று முறை போனிலும் ஒரு முறை விடியோ காலிலும் அவனிடம் பேசி அதற்கு பின் தான் இவனை வேலைக்கு எடுத்தது. 

 

பென்னி இவனிடம் வேலைக்கு வரும் முன் இம்மாதிரி தொழிலதிபர்களுக்குள் பொருட்களை தேவைப்படுவோருக்கு கைமாற்றி விடும் வேலையைத்தான் செய்து கொண்டிருந்தான். 

 

ஆனால் ஆரனிடம் வேலைக்கு சேரும் போதே.. அதையெல்லாம் விட்டுவிட்டு ஆரனிடம் மட்டும் தான் வேலை பார்க்கவேண்டும்! இவன் சம்பந்தப்பட்ட வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்! என்று ஆர்டர் போட்டு விட.. 

 

 

இங்குமங்கும் அலைந்து வரும் சம்பளத்தை விட.. ஆரன் ஒருவனிடம் அதைவிட கூடுதலான சம்பளம் கிடைக்கும் போது பென்னியும் ஏன் மறுக்க போகிறான்? சந்தோஷமாகவே ஒத்துக் கொண்டான்.

 

அதற்கான சில நபர்களை சந்திக்க திருச்செந்தூரில் இருந்து சற்று தள்ளி கடற்கரையோரம் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான் பென்னி. 

 

“சந்திப்பு என்பது வெறும் வாய் வார்த்தைகளோடு முடிந்து விடாது சார்.. கொஞ்சம் நாஜ்வெஜ்.. கொஞ்சமே ட்ரிங்க்ஸ்.. அது தான் இப்போதைய ட்ரெண்ட்!” என்று பென்னி கூற.. ஆரனுக்கும் அவன் வந்த வேலை சரியாக நடக்க வேண்டும். அதனால் பென்னியிடம் தேவையானவற்றை ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தான்.

 

 

அதுபோல அன்றைய சந்திப்புகளில் சில முக்கியமான தொழில் அதிபர்களையும் சில சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியவன், அதற்கு பின் சிறிது நேரம் சோசியல் டிரிங்க்ஸ் என்ற நாகரிகத்தில் கையில் சிறிது நேரம் மது கோப்பையை ஏந்தி விட்டு, மெல்ல அவர்களிடமிருந்து விலகி வெளியே வந்தான் பென்னியிடம் கண்ணை காட்டிவிட்டு.. அவனும் நான் பார்த்துக்கொள்வதாக கண்களை மூடி பதில் கூற.. ஹிமேஷிடம் பேசிக்கொண்டே வெளியில் வந்தான். இப்போது ஹிமேஷ் மும்பையில்..

 

 

அந்த ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் பேசிக் கொண்டே நின்றிருந்தான். மும்பை தொழில் சாம்ராஜ்ஜியத்தையும் அப்படியே விட்டு விட முடியாது. தற்போது தான் துர்கேஷ் துரோகம் அம்பலமாகி எல்லோரும் ஏவி என்றாலே ஒருவித நடுக்கத்தில் இருக்க.. அந்த நடுக்கத்தை.. பயத்தை.. போக்கி விடக்கூடாது என்று முனைப்பில் இருந்தான் ஆரன். 

 

என்ன இருந்தாலும் அதுதான் அவனது வாசம் செய்யும் தளம். இங்கே அவன் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு திரும்பவும் மும்பைக்கு செல்லும் போது.. அவனது கோட்டை சரியாமல் இருக்க வேண்டும். அதற்கு தான் அதன் தளபதியாக அவ்வப்போது ஹிமேஷை அங்கு சென்று மேற்பார்வையிட செய்வான்.

 

ஆனால் அவனது ஒவ்வொரு சொல்லும் ஏன் மூச்சுக்காற்றும் கூட ஆரனின் கட்டளைப்படியே..

 

 

இப்போதும் ஹிமேஷூடன் அவனின் தொழில் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கும் போது.. சட்டென்று அவன் மேல் ஒரு சிறு புயல் தாக்கியது போல இவன் நிலை தடுமாற.. அது புயல் இல்லை பூவென்று மோதிய பிறகுதான் தெரிந்தது.

 

அருகில் இருந்த புல்தரையை மீது விழுந்தவன் மேல் விழுந்து இருந்தாள். அவன் இரண்டு இடங்களில் தவறவிட்ட பாவை!!

 

அவளின் மூடிய கண்களில் தெரிந்த

கருவழியின்‌ சதிராட்டமும்…

மாதுள பழ நிற உதடுகளில் முணுமுணுத்த சாரியும்…

அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்த தளிர் விரல்களின் திரட்சியும்..

அவள் பெண்மையின் வாசமும்..

நெருங்கி விழுந்தவளின் மென்மைகளின் ஸ்பரிசமும்..

அவனின் ஆண் மனதை கிறக்கி முயக்கும் வேலையை பார்த்தன செவ்வனே!!

 

அவள் மூக்கு அவனின் மூக்கோடு முட்டி மோதி முட்டி நிற்க… அவளின் மூச்சு காற்று அவனின் மூச்சு காற்றோடு உரசி அவனது சுவாசத்தில் கலக்க..

அவனின் இதயத்துடிப்பு அவளது வலது நெஞ்சில் பலமாய் துடிப்பதை போலவே அவளின் இதயத்துடிப்பும் தன் வலது நெஞ்சில் துடிப்பதை உணர்ந்த சமயம்.. சொல்ல முடியாத ஆழிபேரலையாய் அவனை அடித்து புரட்டிப் போட்டது அவளின் நெருக்கம்!!

 

அவனை அணைத்தபடி கிடந்தவள் தனது அழகிய மொட்டு இதழ்களை விரித்து அவன் இதழருகில் கொண்டு வந்தவளின் கண்களை பார்த்தான் ஆரன். மயக்கத்தில் இருந்தவள் போல இருந்தாள்.

 

“டேய் சர்வர்.. என்னடா ஆரஞ்சு ஜூஸ் கொடுத்த.. ஓர்ரேரேய்ஏஏ க்கேரியாஆஆ இருக்கு.. பாரு என் லிப்ஸ் எல்லாம் கூட டிரையா போச்சு..” என்று அவனிடம் தனது கீழுதட்டை பிதுக்கி காட்ட..

 

ஆரனுக்கோ சுவாசம் தப்பிய நிலை.. நேற்று முழுவதும் அவளது நினைவுகளில அவன் சுழன்றதென்ன.. இன்று அவன் கைக்குள் அவள் கிடப்பது என்ன.. சற்றும் நம்பாமல் அவளின் பிதுக்கிய உதட்டை கிள்ளி பார்க்க.. 

 

“டேய்.. ஹௌ டேர் யூ டச் மீ?” என்று அவன் மீது ஒய்யாரமாக படுத்துக்கொண்டு அவள் கேட்க..

 

அவனுக்கோ வெகு சுவாரசியம்! இரு கைகளையும் தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டவன், 

 

“மேடம் தான்.. என் மீது உங்க உடம்ப பார்க் பண்ணி இருக்கீங்க.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ரிவர்ஸ் எடுத்து ஓரங்கட்டினிங்கனா நான் என் வழியில் போய்விடுவேன்” என்று ஆரன் கூற..

 

“வாட் ரப்பிஷ்?? எப்படி மேன் உடம்பை பார்க் பண்ண முடியும்? காரை தான் பார்க் பண்ண முடியும்!” என்று கலகலத்து சிரித்தாள் மயூரி, அவளது சிரிப்பு அவனை ரசிக்க அல்ல.. ருசிக்க தூண்டியது அவளது செவ்விதழ்களை..

 

“உனக்கு ரொம்ப போதை ஏறி போச்சு.. யார் கூட வந்த நீ?” என்று கேட்க..

 

“என் அத்த பையன். நிரஞ்சன்.. அவன் கூடத்தான்.. அந்த பக்கி இப்போ காணோம்.. அப்புறம் பின்னாலேயே மயூரி மயூரினு கொஞ்சிக் கிட்டு வருவான் இல்ல.. அப்ப இருக்கு அவனுக்கு!! இவனெல்லாம் எப்படி நம்பி நான் கட்டிக்க? ஒரு பார்ட்டியில கூட என்ன ஒழுங்கா பார்த்துக்க மாட்டேங்குறான்” என்று வீட்டில் மறைமுகமாக பேசப்படும் பேச்சை போதையில் அவள் உளறி வைக்க..

 

இரண்டு மூன்று முறை அவளை தவறவிட்டும் மீண்டும் அவர்களின் இந்த மோதல் சந்திப்பில்.. ஏற்கனவே அவன் மனது சலனத்திலிருந்து ப்ரோமோஷன் ஆகி ஈர்ப்பிலிருக்க.. அதில் இவள் நிரஞ்சன் பற்றி கூறி அவனை சொறிந்து விட்டாள்.

 

 

அத்தோடு நின்று இருந்தாலும் பரவாயில்லை “என் அப்பாக்கு கூட இந்த பக்கிய ரொம்ப புடிக்கும். வக்கீல் வேற சொல்லவா வேணும்? பேசிப்பேசியே எங்க அப்பாவ கைக்குள்ள போட்டுயிருக்கான்.. ஒருவேளை எங்க அப்பா ஓகே சொன்னா நானும் ஓகே சொல்லத்தான் வேண்டும்” என்று அவள் புலம்ப..

 

இதுவரை அவளை வெயிட்டிங் லிஸ்டில் வைத்து இருந்தவன், இப்போது கன்ஃபார்மே பண்ணி விட்டான். இந்த மயூரி அவனுக்குத்தான் என்று!!

 

மெல்ல.. “மயூ பேபி..” என்று இவன் அழைக்க..

 

அவளோ குழம்பத்துடன் அவனை பார்க்க..

 

“நீ ஏன் என்னை பேபி சொல்லுற மேன்?”

 

“ஏன்னா.. நான் உன் லவ்வர்! எப்போதும் அப்படிதானே கூப்பிடுவேன் மயூ பேபி!” என்று அவள் போதையில் இருப்பதை பயன்படுத்தி நன்றாக குழப்பி விட்டான்.

 

“அதெப்படி.. எனக்கு தெரியாம.. எனக்கு ஒரு லவ்வர் இருக்க முடியும்?” என்று போதையிலும் அவள் சரியாக யோசிக்க..

 

“அடிப்பாவி மயூ பேபி.. என்னை பார்க்க தான் நீ இங்க நிரஞ்சன் கூட வந்த.. உனக்காக நான் பார்க்கிங்கில் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.. நிரஞ்சன் கிட்ட பொய் சொல்லிட்டு வரேன்னு சொன்ன.. ஒரு ஆளா வராம இப்படி போதையில உருமாறி வந்து இருக்க.. என்ன மயூ பேபி இதெல்லாம்?” என்று தேர்ந்த காதலன் போல அவன் பேசி அவள் மனதை மேலும் மேலும் குழப்பி விட்டான் ஆரன்.

 

 

“நீ என் லவ்வர்னு நான் எப்படி நம்புறது?” என்று அவள் தாடையில் கைவைத்து யோசனையாய் கேட்க..

அந்த அழகில் சொக்கியது அவன் மனது!

 

“இங்கே பார் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த என் மேலேயே எப்படி விழுந்திருக்க.. நெருக்கமாக.. இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?” என்றவனை கூர்ந்து பார்க்க முயன்று அவள் தோற்க..

 

“இல்லையில்லை.. நீ பொய் சொல்லுற..”

 

தன் உதடுகளுக்கு அருகில் அசையும் அவளின் வெல்வெட் உதடுகளை அடுத்த நொடி கவ்விக் கொண்டான்.

 

ஆஆஆ என்ற‌ அவள் அதிர்ச்சி எல்லாம் அவனின் இதழ்களுக்குள் சென்று மறைந்தது.

 

பயத்தில்.. போதையில் அவளும் அவனது சட்டையை இறுக்கி கொண்டாள்.

 

முதல் முறையாக ஆரன் சுவைக்கும் ஒரு பெண்ணின் இதழ்கள்.. 

அதன் மென்மை.. 

அதன் சுவை.. 

அதன் வனப்பு.. 

அதன் கிறக்கம்.. 

அதன் லயிப்பு..

 

அவன் வாழ் நாளில் அனுபவித்திராத உணர்ச்சி அவனை மொத்தமாக தாக்கியது. அவளை வீழ்த்த நினைத்தவன் அவளில் வீழ்ந்து கொண்டிருந்தான் அவன் அறியாமலே!!

 

 

அவனது முத்தம் சற்றே ஆவேச முத்தமாக மாறி அவளையும் கிறங்கடித்து விட்டது. இருவர் உதடுகளும் மிக வாகாக பொருந்திக் கொண்டன. எவர் இதழ் எவர் இதழுக்குள் என்று அறியா வண்ணம் மிகு லயிப்புடன் அந்த முத்தம் தொடர..

 

“மயூரி.. மயூரி.. அடியேய் மயூரி இந்திராக்ஷி!!” என்ற‌ நிரஞ்சனின் குரலில் ஆரன் முத்த யுத்தத்தினை நிறுத்தி நிகழ் காலத்திற்கு வர, அவளோ அவன் தந்த முத்தத்தில் கிறங்கி.. முயங்கி.. மயங்கியே விட்டிருந்தாள்.

 

நிரஞ்சன் அவர்கள் அருகில் வருவதை உணர்ந்தவன் சட்டென்று அவளை புரட்டி முதலில் அவன் எழுந்து பின்பு அவளை தன் கைகளில் தூக்கி நிறுத்தி..

 

“எக்ஸ்கியூஸ் மீ..” என்று சத்தமாக நிரஞ்சனை கைகாட்டி தன்னருகே அழைத்தான். 

 

“இவங்களை தான் தேடுறீங்களா?” என்று தன் கைகளில் மயங்கி விட்டிருந்த மயூரியை காட்டி கேட்க.. நிரஞ்சனோ “ஆமாம் சார்.. இவளைத்தான் தேடுனேன். என்னாச்சு இவளுக்கு? மயூரி ஏய் மயூரி?” என்று அவன் கைகளிலிருந்தவளை தன் கைகளுக்கு தாங்கி கொண்டவன் மாறிமாறி கன்னத்தில் தட்ட..

 

 

“ஜஸ்ட் ஸ்டாப் மிஸ்டர்! எதுக்கு இப்படி மாறி மாறி அடிக்கிறிங்க?” என்று கோபம் முகிழ்த்தது ஆரனுக்கு அடுத்தவன் தன்னவளை அடிக்கும் பொழுது..

 

நிரஞ்சன் பயந்தவன் “இல்ல சார்.. மயக்கம் போட்டு டா.. அதான் தட்டி எழுப்பலாம்னு” மென்று முழுங்கினான் அவன்.

 

“அறிவு இல்ல உங்களுக்கு? பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.. எப்படி இந்த மாதிரி பார்ட்டிக்கே அழைச்சிட்டு வந்த உங்க தங்கச்சிய உங்க கூடவே வைத்துக் கொள்ள உங்களுக்கு தெரிய வேண்டாம்” என்று அவளை அவனுக்கு தங்கையாக்கினான்.

 

 

“அவ என் தங்கச்சி இல்லை..” என்று அவன் கூற வரும் முன், “யாரோ ட்ரிங்ஸ்ல ஏதோ கலந்து கொடுத்திருக்காங்க.. தள்ளாடி கிட்டே வந்தாங்த.. வந்தவங்க இங்கே தொப்புன்னு மயங்கி என் மேலேயே விழுந்துட்டாங்க.. எனக்கு யார் என்னன்னு தெரியாம இவ்ளோ நேரம் அவங்களை எழுப்ப ட்ரை பண்ணி.. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போதுதான் நீங்க அவங்களை தேடி கிட்டு வந்தீங்க. இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க.. எவ்வளவோ நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை நாம் பார்க்கிறோம் கேட்கிறோம்.. அப்படி இருந்தும் இவ்வளவு அலட்சியம் உங்களுக்கு?” என்று அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டுத்தான் அனுப்பினான் ஆரன். அதுவும் அவனை காரில் ஏறி சொல்லிவிட்டு இவனே அவளை தூக்கி பின் சீட்டில் படுக்க வைத்தான்.

 

“தாங்க்ஸ் ஃபார் ஆல்.. யுவர் குட் நேம் சார்?” என்று அவன் கேட்க.. ஏனோ முழு பெயரை அப்போது சொல்ல ஆரனுக்கு மனம் வரவில்லை. வித்யூத் என்று மட்டும் கூறினான்.

 

அவன் கார் கிளம்பி சென்று வெகுநேரம் அங்கு கடற்கரையில் நின்று இருந்தவன் மனதில் ஏகப்பட்ட உணர்ச்சி பெருக்கு. 

 

 

‘மயக்கத்திலிருந்த பொண்ணு மீது நாம் அத்துமீறி விட்டோமோ?’ என்று முதலில் சங்கடப்பட்டவன்..

 

“இல்லை.. இல்லை.. அவளை என்னுடையவள் என்று நான் முடிவு செய்த பிறகே அவளை தீண்டினேன் அதனால் தவறில்லை!” என்று அவனே அவனுக்கு பதில் உரைத்துக்கொண்டு தன்னை நியாயப்படுத்தி கொண்டான்.

 

 

வீட்டுக்குள் இவர்கள் செல்லும் முன் அவள் மீது தண்ணீர் ஊற்றி கன்னத்தை வேகமாகத் தட்டி ஒரு வழியாக அவளை முழிக்க வைத்து வழியில் இரண்டு லெமன் ஜூஸை வாங்கி அவளுக்கு கொடுக்க வைத்து ஓரளவு அவள் தெளிந்த பின்னே வீட்டுக்கு அழைத்து சென்றான் வக்கீல். பின்னே யார் கண்ணிலாவது மாட்டினால்.. அவன் நிலைமை அவ்வளவுதான்..

 

 

மறுநாள் மாலை வேலை முடிந்தவுடன் இன்றும் தன் அண்ணனோடு தான் வந்தாள் மயூரி.

 

“அண்ணா போகும் போது ஆராவ கூட்டிட்டு போகனும். அவ நியூ டிசைன் முத்துல ஒரு செட் பண்ணி இருக்குறதா சொன்னா. எனக்கும் அவளுக்கும் நீ அதை வாங்கி கொடு” என்று அண்ணனிடம் உரிமையாக கேட்ட தங்கையின் தலையை பிடித்து ஆட்டினான் நிமிலன்.

 

 

“வீட்ல நீங்க மூணு பேர் இருக்கீங்க! உங்களுக்கு மட்டும் நான் தனியா வாங்கி தர முடியாது டா.. வேணும்னா நீயா வாங்கிக்கோ மணி நான் தனியா தரேன். ஆனால் நான் வாங்கி கொடுத்தேனு நீ போய் வீட்ல யார் கிட்டேயும் சொல்ல கூடாது” என்றான்.

 

 

“ஆனாலும் இவ்வளவு பொறுப்பா நீ இருக்க கூடாது? ஏன் சின்ன அத்தை ரஞ்சனிக்கு அவளுக்கு பிடிச்சது தனியா தானே வாங்கி தராங்க? நீ ஏன் இப்படி இருக்க?” என்று கேட்க..

 

 

“அவங்க அம்மா அவளுக்கு வாங்கி தருவது வேறு டா. உனக்கு அம்மா அப்பா வாங்கி தருவதும் வேறு. இப்ப நான் உனக்கும் ஆராதனாவுக்கு மட்டும் வாங்கி கொடுத்தா அது ஒரு பெரிய பிரச்சனையாகும். சின்ன அத்தைப் பற்றி ஏற்கனவே உனக்கு தெரிந்திருந்தும், இதுக்கெல்லாம் நாமே இடம் கொடுக்கலாமா? நீயே சொல்லு?” என்றான் பொறுப்பான அண்ணனாக..

 

 

“சரி சரி.. பொலம்பாத போ! நான் என்னோட கார்டிலேயே பேமென்ட் போடுறேன். ஆனால் அந்த அமௌன்ட் நீ எனக்கு பிளாக்கா தனியா கொடுத்திடனும்” என்று மயூரி கண்டிஷன் போட..

 

 

“அடிப்பாவி!! நீ ஒரு ஆடிட்டர்னு நிருபிக்கிற பார்த்தியா? ப்ளாக் ஒயிட்டுனு கேட்டு. நீ எல்லாம் நல்லா பொழச்சுக்குவ” என்றவனின் கார் அவர்களின் செந்தூரார் நகை மாளிகை முன் நின்றது.

 

 

 

இரண்டாம் தளத்தில் மேனேஜர் அறையில் அமர்ந்திருந்தாள் ஆராதனா. வேதவள்ளியின் சாயல் லேசாக இருக்கும் அவளிடம். அதிலும் அவள் சிரிக்கும்போது விழும் அந்த கன்னத்துக் குழி அவளின் அழகை பேரழகாக காட்டும்!!

 

 

 

இவர்கள் இருவரையும் பார்த்த உடன் மெல்ல தலையசைத்து புன்னகைத்தவளை சற்று நேரம் விழி அகலாமல் பார்த்த நிமிலன் அதன்பின் சாதாரணமாக பார்த்து “நீ இன்னும் கிளம்பலையா ஆரா?” என்று கேட்டான்.

 

 

அவனின் அந்த பார்வை மாற்றத்தை இரு பெண்களும் கவனிக்கவில்லை. வீட்டிலெல்லாம் அவ்வாறு அவளை பார்த்திட மாட்டான். ஏனென்றால் சுற்றிலும் ஆட்கள் இருப்பார்கள். அவ்வப்போது இவர்கள் மட்டும் இருக்கும் தனிமையில் ரசித்து ரசித்துப் பார்ப்பதை தன் தங்கையிடம் கூட இதுவரை அவன் பகிர்ந்ததில்லை.

 

 

‘முதலில் தங்கை கல்யாணம் முடியட்டும். அதற்குப்பின் பார்க்கலாம்!’ என்று ஆற போட்டு இருக்கிறான் ஆராவின் நினைவுகளை.‌..

 

 

அதன் பின் அவளது லேட்டஸ்ட் டிசைனான முத்துவினால் சிறகை விரிக்கும் வண்ணத்துப்பூச்சி போல லாக்கெட்.. அதற்கு பொருத்தமான காதணிகள்.. ஆரா காட்டிட அதன் அழகில் மெய்மறந்த மயூரி “இதுல ரெண்டு செட் உடனே பேக் பண்ணுடி நான் பே பண்ணிடுறேன்!” என்றாள்.

 

 

“சோ சாரி டியர்!! இது ஆல்ரெடி சோல்ட்! இது புது டிசைன் சொல்லி ஆன்லைன்ல நான் இன்னிக்கு தான் அப்லோட் பண்ணுனேன். போட்ட ஹாஃப்னவரிலேயே சோல்டு ஆயிடுச்சு. இது இன்னிக்கு நைட் பேக் பண்ணி சொன்ன அட்ரசுக்கு அனுப்பிடுவாங்க. இதே மாடல்ல இப்போ அண்டர் மேனுஃபேக்சர்ல இருக்கு. எப்படியும் ஒன் வீக்ல வந்துரும். நான் வந்தவுடன் ரெண்டு பீஸ் எடுத்து வைத்திடுறேன். ஓகேவா?” என்று தன் தோழியை சமாதானப் படுத்தினாள்.

 

 

“பரவால்ல!! ஆனாலும் இது ரொம்ப அழகா இருக்குடி!” என்று அந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளை ஆசையோடு பார்த்தாள். 

 

 

“அது என்ன ரெண்டு மட்டும் பேக் பண்றேன்னு சொல்ற ஆராதனா? நீங்க வீட்டுல மூணுபேர் இருக்கீங்களே” என்று தங்கையிடம் கேட்டது போல ஆராதனாவிடம் கேட்க..

 

 

“அது இல்ல அத்தான்!! போன முறை நான் டிசைன் பண்ணின முத்து செட் ரெகுலர் யூசுக்கு போடுற மாதிரி.. நான் ரஞ்சனி கிட்ட கொடுத்தேன். ஆனா அவளோ இதெல்லாம் ஒரு டிசைனா? அதுவும் இந்த மாதிரி சின்னதா போடுவதெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு இல்லன்னு சொல்லிட்டு வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டா.. கூடவே சித்தியும் சேர்ந்து ஒரு ஆட்டம் ஆடி அடங்குனாங்க. அதனால இந்த மாதிரி டிசைன்ஸ் எல்லாம் அவகிட்ட காட்டுவதே கிடையாது. எங்களுக்குள்ள மட்டும்தான்!!” என்று தன் தோழியை தோளோடு அணைத்துக் கொண்டாள்.

 

 

இவர்களின் இந்த பிணைப்பு மனதிற்கு ஒரு இதத்தை தந்தது நிமிலனுக்கு!!

 

இதே இதம் எதிர் காலத்தில் இருக்குமா என்பது சந்தேகமே??

 

 

மறுநாள் காலை.. திருச்செந்தூரில் புதிதாக கட்டுப்பட்டு இருந்த அந்த ஆறு மாடி கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் அமர்ந்து தனக்கு எதிரே இருந்த பார்சலை மிக மெதுவாக பிரித்தவனின் கண்களில் விழுந்தது அந்த முத்து செட்!!

 

அந்த நீல நிற விழிகளில் மெல்லிய வெற்றிக் களிப்பு!!

 

“வெயிட் இந்திராக்ஷி!! ஐ அம் கம்மிங் ஃபார் யூ!!” என்று சிரித்தவனின் சிரிப்பில் இருந்த அந்த அசுரத்தனம் அருகில் இருப்பவரை கூட அச்சம் கொள்ள வைத்தது.

 

நேற்று மயூரியாக இருந்தவள்.. இன்று இந்திராக்ஷி ஆனதன் காரணம் என்னவோ?