கதைப்போமா காதலே‌… 10

கதைப்போமா 10

 

 

மொட்டை மாடிக்கு அவன் சென்றது என்னவோ அவளை பார்க்க தான்!! ஆனால் பார்த்த உடனே உள்ளுக்குள் முகிழ்ந்த கோபம் நவியை விட்டு விலகி செல்ல தான் தூண்டியது விதுரனை!! 

 

முதலில் அவளை பேசி வருத்திவிடுவோமோ என்ற கோபம்… அடுத்து தனக்குள் வந்த அந்த ஈர்ப்பு!! சிறுதெனினும் அது அவளிடம் பிரதிபலிக்கவில்லையே என்ற ஆதங்கம்!! அதையெல்லாம் தாண்டிய சிறு கர்வம்!! 

 

ஆம்!! கர்வமே தான்!! என்ன தான் இருந்தாலும் ஆண் என்ற கர்வம் இல்லாத ஆண்கள் வெகு குறைவு என்பதை விட அதை காட்ட சந்தர்ப்பம் கிடைக்காததே நிதர்சனம்!! 

 

அடுத்து அவன் முன் அணிவகுத்து நிற்கும் கடமைகள்!! அக்கடமைகளை கடக்காமல் காதல் கொள்வது எப்படி? காதலியை கரம் பிடிப்பது எப்படி? 

 

இந்த ஈர்ப்பு… இந்த சலனம்… இந்த பிடித்தம்… இப்போதுதான் வரவேண்டுமா? என்று தன் கையறு நிலை நினைத்து தன் மீதே ஆத்திரம்!! 

 

அதையெல்லாம் தாண்டி… தன்னவள் என்ற எண்ணம் முழுதாக ஜிவரவில்லை தான். ஆனாலும் தன் மனதுக்கு நெருக்கமானவ்ள் அவள்!! அவளிடம் ப்ரப்போஸ் செய்யப்போவதாக தன்னிடமே கூறுபவர்களை அடித்து நொறுக்க முடியாத கோபம்! ! 

 

இவை அனைத்தும் கலந்த கலவையாய் அவன் நிற்க.. அதனை புரியாத அவளும் அவனையே பார்த்து நிற்க… 

அவளை தாண்டி சென்றவனின் கையை பிடித்து நிறுத்தினாள் நவ்னீதா!! 

 

கை எட்டும் தூரத்தில் தான் வாழ்க்கை!! காதல்!! எல்லாம்… ஆனால்.. அதை பிடித்திட.. அதுவாய் பிடித்திட்ட போதும் தள்ளி தான் சென்றான் விதுரன்!! அதுவே அவளை வருத்தியது!! ரணமாய்… 

 

திரும்பி அவளை பார்க்கவில்லை என்றாலும் அவன் கண்கள் கூர்ந்து அக்கைகளை தான் பார்த்திருந்தது!! அவளுக்கும் அது தெரிந்தாலும் கையை விலக்காமல் இருக்க… ஒரு ஆழ்ந்த மூச்சை விடுத்தவன், சட்டென்று அவள் கையை உதறி சென்றான். 

 

அவன் உதறுவான் என்று எதிர்பாராத நவி, அதிர்ந்து நின்றது என்னவோ ஒரு கணம் தான்!! சட்டென்று அவனின் சட்டையை பின்புறமாக எக்கி பிடித்தாள். முதல் முறை செய்தது போல இம்முறை செய்ய இயலவில்லை அவனால்!! 

 

நிதானித்து நின்றவனோ நிதானித்தில் இல்லை!! முழுமையாக அவனை ஆல்கஹால் ஆட்கொண்டிருந்தது!! 

 

“விடுடி!! குடிச்சிருக்கேன் எக்கு தப்பா பேசிட போறேன்!!” என்றான் வரவழைத்த பொறுமையோடு!! 

 

எப்போதும் மா என்று மரியாதையான அவனது அழைப்பு நவியிடம் மட்டுமல்ல அனைத்து பெண்களிடமும்!! அதை உடைத்து அவன் வெளி வந்திருந்தான்.. முதல் முறையாக அவனின் உரிமையான டி என்ற அழைப்பு!! ஆனால் கூப்பிட்டவனுக்கும் புரியவில்லை!! கேட்டவளுக்கும் தெரியவில்லை!! அந்த உரிமை… அது எதனால் என்று!! 

 

“என்னாச்சு? ஏன் இவ்வளவு கோபம்? ட்ரிங்க்ஸ் எடுத்தியா?” என்று மெதுவாக கேட்டவள் பின்பு பல்லை கடித்துக்கொண்டு அவனிடம் கோபமாக கேட்க. .. 

 

“ஆமாம் எடுத்தேன்!! அதனால இப்ப என்ன?” என்றவனின் அந்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை!! சட்டென்று பிடித்து இருந்த சட்டையை விட்டு சற்று தள்ளி நின்றாள். 

 

இன்னும் அவனது கோபம் பெருகியது அவள் தள்ளி நின்றதால்… 

 

“நான் டிரிங்க்ஸ் எடுக்குறதுனால உனக்கு என்ன குறைந்து விடப் போகிறது? வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட் தானே!! அப்படித்தானே சொல்லிக்கிட்டு இருக்க…”

 

“அது தானே உண்மை!!” என்றாள் நவி தன் மனது லேசாக சலனம் கொண்டதை மறைத்தபடி!! 

 

“ம்ம்… வெறும் ப்ரண்ட்!! எஸ்… ஜஸ்ட் ப்ரண்ட்!! ஆனா… எனக்கு உடம்பு சரியில்லாத போது எனக்காக சமைத்து வாங்கி வந்தது கூட பிரண்ட் லிஸ்டில் தான் சேரும்!! அடுத்தவன் உன்னருகில் நெருங்கி வந்தா கூட சட்டென்று நீ என்னருகில் வருவது ப்ரண்ட் லிஸ்டில் தான் சேரும்!! எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நைட் ட்ரஸ் நீ போட்டு சுத்துவதை நிறுத்தியது கூட ப்ரண்டு லிஸ்டில் தான் சேரும்!! ” என்று அவன் அடுக்கிக் கொண்டே செல்ல…”லூசாப்பா நீ!! இதெல்லாம் கூட பிரண்ட்ஷிப்காக தானே செய்வார்கள்?” என்று பார்த்தாள் நவி!! 

 

அவள் விழி மொழியின் அர்த்தம் படித்தவன் நினைவில் கணேஷ் கூறியது வந்து செல்ல.. அதன் கணம் தாங்காமல்.. இரு கைகளாலும் தலையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான் விதுரன்!!

 

“என்ன ஆச்சு விதுரா? தலை வலிக்குதா? தலைபாரமா இருக்கா? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? பழக்கமில்லாதததை ஏன் எடுத்துகிற?” என்று அவனைக் கடிந்து கொண்டு அவனருகே சென்றாள் நவி!! 

 

“வேண்டாம் தூரப்போ டி!! தூரப் போ டி!!” என்று கத்தினான் விதுரன். அவளின் அக்கறை சக்கரையாய் இனித்தது. ஆனாலும் கசந்தது!! 

 

“ம்ப்ச்… விதுரா… நீ சரியில்ல!! வா கீழ விட்டுட்டு போறேன்!! ” என்ற அவள் அக்கறையாக கேட்க, அதில் விட்டுட்டு போகிறேன் என்பது மட்டுமே அரைகுறையாக கேட்டவனுக்கு, அவ்வார்த்தை அவனுக்கு என்னத்தை ஏற்றி விட்டதோ… அருகில் வந்தவளின் கரத்தை இறுக்கி பிடித்தான். 

 

அவள் புரியாமல் குனிந்து அவன் கையைப் பார்த்தாள். அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்து, அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் விதுரன். பின் வில் புருவங்கள். . கயல் கண்கள்… செழுமையான கன்னங்கள்.. என்று தொடர்ந்து முத்தமிட்டான். முத்தமிட்டுக் கொண்டே இருந்தான். 

 

அவள் அதிர்ந்து போய் நின்றாள் சிலையென!! இறுதியில் அவளின் சின்ன சிவந்த உதட்டில் அவன் உதட்டை வைத்து லேசாக முத்தமிட, அவளுக்கு குபுக்கென கண்ணீர் பொங்கி விட்டது!! இதயத்தில் படபடப்பு கூடியது!! சட்டென தள்ளிவிட்டு அவனிடமிருந்து விலகி முன்னால் ஓடி விட்டாள். படபடப்பை தணிக்க.. 

 

‘என்ன காரியம் செய்து விட்டான்? பன்னி பய.. எருமை.. குரங்கு..’ என்று அவளுக்கு தெரிந்த வரையில் அவனை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் மூச்சு வாங்க… வாங்க…  

 

‘ட்ரிங்க்ஸ் எடுக்காதன்னு சொன்னா கேட்காம.. மொடா குடிகாரன் மாதிரி குடிச்சிட்டு வந்து என்ன செய்யணும்னு தெரியாம செஞ்சுட்டு இருக்கான் எரும.. இவனிடம் இப்போ பேசக்கூடாது காலையில் வந்து பேசிக்கலாம்’ என்று நகர முயன்றவளின் கையை இப்போது அழுத்தமாக பிடிப்பது விதுரனின் முறையானது. 

 

“விதுரா… . வேணாம்… விடு!! நீ.. நீ… இப்போ நிதானத்தில் இல்லை” என்று கூறியவளின் இடை இப்பொழுது இரு கைகளால் இறுக்க பற்றப்பட்டு அவன் புறம் திருப்பப்பட்டது வன்மையாக!! 

 

“விதுரா… வேணாம்..” என்றவளின் உச்சரிப்புகள் எல்லாம் உறியப்பட்டன!! 

அவளின் உதடுகளும் நாக்கும் அவனால் தயக்கமின்றி உறிஞ்சி சுவைக்கப் பட்டன!! 

 

அவ்வளவு ஒரு ஆவேச முத்தம் அது!! முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடாக இருப்பதை காட்டிலும் விருப்பத்தின் உச்சமாக தான் இருக்கிறது!! இங்கே விதுரனின் விருப்ப உச்சமாக.. இச்சுகள்!!

அசுர இச்சுகள் தான்!! 

 

முத்தத்தை விட அதைக் கொடுக்கும் ஆவேசத்தில் கிளர்ந்து எழும் மோகத்தின் உச்சத் தவிப்பான உணர்ச்சித் தூண்டலே முத்தத்தின் சுவையை தீர்மானிக்கிறது!! மென் முத்தத்தில் மனதின் அன்பை வெளிப்படுத்துவது!! மென் முத்தம் மென் காதலுக்கானது!! அதில் அன்பும் பாசமும் மிகுந்திருக்கும். ஆனால்… தன் மோகத்தினத்தையும்… தன் மனதின் ஆற்றாமையை வெளிப்படுத்தும் வடிகாலாகவும்… சொல்ல முடியா காதலை சொல்லும் செயலாகவும்.. ஆவேசமாக கொடுக்கப்படுவது வன்இதழ் கொய்தல் தான்!! அதைத்தான் விதுரன் இப்பொழுது செய்து கொண்டிருந்தான். 

 

மூச்சிறைக்க கடித்து உறியும்போது வலியுடன் சிக்கிச் சிதைவுறும் உதடுகள் தித்திப்பதை வன் முத்தத்தில் மட்டுமே உணர முடியும். அந்த நேரத்தில் எவ்வளவு கடித்தாலும் வலிப்பதில்லை. கடிக்கக் கடிக்க சுகம்தான் கூடுகிறது. அப்போது உடலில் எழும் வலி உணர்ச்சியை விட, உச்சம் நோக்கிச் செல்லும் மோகம் மிகுந்த வலிமை பெற்றதாகி விடுகிறது. அந்த வன் முத்தத்துக்கு சற்றே மனதை வெளிப்படுத்தும் திறன் உண்டு பல நேரத்தில்!!

 

உதடுகள் இரண்டும் தீப் பற்றி எரிவது போன்று இருந்தது நவிக்கு!! உதடுகள் மட்டுமா… உதட்டில் இருந்து கடத்தப்படும் உணர்வானது நரம்புகள் வழியே உடலில் மின்னலென பரவி படர்ந்தது!! சுக வலியா? இல்லை வலியில் சுகமா? புரியவில்லை பெண்ணவளுக்கு!! பெண் மனதின் கூக்குரலோ.. அவளது வலி மிகுந்த கண்களோ.. ஆணவன் அறியவில்லை!! 

அவனின் உன்மத்தம் ஏறிய முத்தமும் நிறுத்திய பாடு இல்லை!!

 

அவளின் உதடுகள் மீது அவனின் உதட்டுகளை அழுத்தமாக பொறுத்தி அவனின் கோப தாபத்தை எல்லாம் அவள் உதட்டில் காட்டிக் கொண்டிருந்தான். முத்தச் சமரானது வெறும் இதழ்களோடு நிற்கவில்லை!! 

 

அவளுடைய நாக்கை தன் நாக்கால் சுழற்றி எடுத்து வாயில் வைத்து உறிஞ்சினான் விதுரன்!! இறங்கியிருந்த போதையை விட இப்போதை பெரும் போதையானது!! முத்தம் போதையா? ஆம்!! ராஜ போதை!! 

 

அந்த ராஜ போதையில் மோக உணர்ச்சி மீண்டும் தூண்டபட.. அது மட்டுமில்லாமல் ஏற்கெனவே அவள் மீதியிருந்த கோபத்தால் இன்னும் அவளது உதடுகளை மென்று தின்றான் கொன்றான் அவன்!! 

 

வலியில் ‘ஸ்ஸ்ஸம்ம்மா’ கத்த அடுத்த நொடியே அவள் உதட்டை விட்டவன், சற்று பொருத்து, இதழை பொறுத்தி கவ்வி உறுஞ்சி சத்தத்தை அணைத்து இச்சத்தை கொடுத்தான் உச்சமாக!! 

 

தன் உதட்டில் உதட்டை பொறுத்தி உறுஞ்சிக் கொண்டிருக்கும் இவன் சரியான ரட்சஷன் தான்!! என்று அவனை வைதுக் கொண்டிருந்தாள். அவனிடமிருந்து உதட்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி கொண்டு விலகி நின்றாள் நவி மூச்சறைக்க!! சிவந்த முகமாய் கடும் கோபத்தோடு!! 

 

அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனை கன்னத்தில் ஓங்கி ஒர அறை விட வேண்டும் போலிருந்தது. ஆனால் அவன் போதையில் செய்திருக்கிறான் என்பதை புரிந்தவளால், அவளுக்குள் பொங்கி வந்த கோபத்தை அடங்கி கொண்டாள். ஆனால் அவளுக்குள் இருந்த கோபத்தை முகத்தில் காட்ட தவறவில்லை. அப்போதை சரக்கினால் வந்தது என்று அவள் நினைத்து இருக்க.. அதுவோ மெல்லிடையாளின் மென் உதட்டில் பதித்த மென் முத்தத்தால் உண்டான போதை என்பதை அவள் அறியவில்லை!! 

 

அவள் முகத்தில் தெரிந்த கோபத்தை பார்த்து விட்டு அவனே தான் பேச்சை ஆரம்பித்தான். 

 

“நிதா… நிதா… ” என்று அவன் உளற… 

 

போதும் என்று அவள் கையை நீட்டி உயர்த்தினாள். இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று கொத்தித் தின்றது சற்றுமுன் இதழ்கள் தின்றது போல.. ஒன்று கோபமாக!! மற்றொன்று தாபமாக!! 

 

மொட்டை மாடியின் இரவு நேர குளிர் காற்று வேற அவன் தாபத்திற்கு துணை சேர்த்தது. மேலும் சுழன்றடிக்கும் காற்றில் அவளது டாப்ஸ் விலகி 

அவளின் சின்ன நாபி குழி அழகாய் சிலிர்த்து சுழித்திருந்தது. அவள் வயிறு உள்ளமுங்கி பின் வளைந்து செழுமையை பறைசாற்றியது. அனைத்தும் போதை ஏறி விழிகளால் ரசித்துக் கொண்டிருந்தான் விதுரன். 

 

அதன் கவர்ச்சியும் அவளின் செழுமையும் அவனின் இளமை தாகமும் அவனின் ஆண்மையைச் சுண்டியது. சட்டென்று குனிந்து அவள் வளைத்து அவனை கவர்ந்திழுத்த கவர்ச்சியில் 

முத்தமிட்டான். நவி அதிர்ந்து மறு கையில் அவன் முகத்தை தள்ளி விட்டாள். ஆனாலும் அவனில் சற்று மூர்க்கத்தனம்!! முயன்று தள்ளியவளை இழுத்து முக்குளித்தான் முத்தை தேடி!! 

 

 

“விதுர்ரராஆஆஆ… . விடு!!” என்ற அவள் ஈன ஸ்வரத்தில் கெஞ்ச… சற்றே நிதானித்தவன் அவள் தோளைப் பிடித்து நின்று தலையை உலுக்கிக் கொண்டான். 

 

கண்கள் இருண்டு ஒளிப் புள்ளிகள் கனல் கங்குளாய் அவளுக்கு மின்னின..

 

கண்களை மூடித் திறந்து பார்வையைச் சுழற்றினாள். காட்சிகள் புலனாகின. மெல்ல விலகி அங்கிருந்த பைப்பில் நீரைத் திறந்து முகத்தை கழுவினாள். அவள் பின்னால் இருந்தவனின் முகத்தில் தண்ணீரை ஊற்றினாள். அடுத்த நொடி விடுவிடுவென்று சென்று விட்டாள். 

 

“ச்சாரி.. போதையில… நித்த்தா ச்சாரி…” என்றவன் மயங்கி சரிந்தான். 

 

மறுநாள் அவனை கணேஷ் தான் உலுக்கி எழுப்பினான் அவனது படுக்கையில். .. “எழுந்திரு உனக்கு நேரம் ஆயிட்டு விதுரா ட்ரையினுக்கு… எழுந்திரு!” எழுந்தவுடன் அவசர அவசரமாக முகத்தை கழுவியவன் வேகமாக நவியின் அறைக்கு செல்ல அங்கே பூட்டிய அறையே அவனை வரவேற்றது!!