ஏகாந்த இரவில் வா தேவதா! – 22 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா 

[22]

சத்யாதித்தன்.. அந்தக் கல்லுமலையின் உச்சிக்கு ஏறி வந்ததும், தன்னிரு முழங்கால்களைப் பிடித்துக் கொண்டே, குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டே, தன்னவளை நாடிப் போனான். 

அவள் இல்லாத போது அவனில் உருவாகியிருந்த பதற்றம்..அவளைக் கண்டதும்.. கொஞ்சம் கொஞ்சமாக அவனை விட்டும் அகல்வது போல இருக்க, இரவில் கானகம் தேடி அநாயசமாக வந்திருக்கும் மனைவியின் மீது.. பொல்லாத கோபம் எழுந்தது அவனுக்கு. 

இருந்தாலும் அவனது கோபத்துக்கும் மேலாக அவன், அவள் மேல் வைத்திருந்த காதல் பெரிதல்லவா? 

அவளைக் கண்டதும் உடலினுள் ஒரு ஆசுவாசம் பிறக்க, தன்னையும் மீறி ஈரெட்டில் பாய்ந்து வந்து அவளை அடைந்தவன், 

அவளது மெல்லிய வயிற்றுக்கு மேலாக தன்னிரு கைகளையும் கோர்த்து.. தன் மார்பில்.. அவளது முதுகை சேர்த்துப் பின்னிருந்து அணைத்துக் கொண்டான் அவன். 

அவள் தோளில் நாடி பதித்து, தன் முரட்டுக் கன்னத்தை அவளது மென்மையான கன்னங்களுடன் உரசியவன், அவன் காதோரம் கிசுகிசுப்பாக, “கொஞ்ச நேரத்தில்.. என்னை பயமுறுத்துட்டியேம்.. மா” என்று சொன்னது கூட அத்தனை உணர்ச்சிபூர்வமாகவே இருந்தது. 

அவளுக்குமே அந்தக் குளிரான காலநிலையில்.. அவனது அணைப்பு இதமாக.. கதகதப்பாக இருந்த போதிலும், கணவனின் முகத்தைத் திரும்பிப் பாராமல்.. தூரத்தில் தெரியும் பனி போர்த்திய மலைமுகடுகளைப் பார்த்த வண்ணமே அவள் கேட்டாள், 

“என் மேல உனக்கு காதலிருக்கு… அதனாலே தானே என்னை தேடி வந்த?”என்று. 

அந்த வார்த்தைகளில் ஆழமான அர்த்தம் பொதிந்திருந்தது. அவளது குரலிலும் கூட ஒரு ஆழமான அன்பு புரையோடிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. 

ஆனால் சத்யாதித்தன்.. மனைவியைக் கண்ட திருப்தியில்.. அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்ட போதிலும் கூட, அவளது அந்தக் கேள்வியில்.. சடுதியாக அவள் மேல் கொண்ட ஊடல் நினைவு வந்து போக, அவளிடமிருந்து பிரிந்து கொண்டவனின் முகம் விறைத்துப் போயிருந்தது. 

அவள் சம்மதமின்றி.. அவள் முன்னங்கையை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டவன், “வா.. வீட்டுக்குப் போகலாம்”என்று அழைத்தான் சத்யன்.

யௌவனா அவள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் அசையவேயில்லை. மாறாக இருந்த இடத்திலேயே இடித்த புளி போல நின்றவள், அவனது விழிகளை ஊடுருவி நோக்கியவளாக, “உண்மைய ஒத்துக்க சத்யன்.. இன்னும் என் மேல காதலிருக்கு.. அதான் ஃப்ளைட்டை கூட விட்டுட்டு என்னைத் தேடி வந்திருக்க? அப்படித்தானே?”என்று கேட்க, 

சத்யாதித்தனால் வெகுநேரத்திற்கு மேல்.. தன் காதல் மனைவியின் முகத்தை விறைப்புத் தன்மையுடன் பார்த்திருக்க ஏனோ முடியாமல் போயிற்று. 

அன்று.. யௌவனாவின் முகம்.. அவன் எஞ்ஞான்றும் பார்த்திராதவாறு.. ரொம்பவும் வித்தியாசமாக.. அந்த இரண்டாம் நாளைய பூரணை நிலவை ஒத்த வதன ஒளியுடன் இருப்பதை அவதானித்தான் சத்யன். 

அவள்.. தன் வாய்க்குள்ளாகவே காதலுடன் தகிக்கும் ஓர் மர்மப்புன்னகை புரிந்தும், புரியாதது போலவே தோன்றியது சத்யனுக்கு. 

அதிலும் அவனையே ஒருவித மோனத்தவத்துடன் பார்த்திருக்கும் அவளது விழிகள், 

அந்த சத்திரிய வம்சத்தானையும் கட்டிப்போடும் போல இருக்க, தலையை கோதி விட்டுக் கொண்டே புன்னகைத்தவன், ஒரு பெருமூச்சுடன், “ஆமா.. இப்போ வா வீட்டுக்குப் போகலாம்”என்று மனைவியை சாந்தமாக அழைத்துப் பார்த்தான். 

அவள் அப்போதும் அவ்விடத்தை விட்டும் நுனியளவு கூட நகராமல், அவனை அப்படியே சுண்டியிழுத்து தன் கண்களுக்குள் சிறை வைப்பது போல பார்த்தவள், “அப்புறம் எப்படி.. என்னை விட்டுட்டு இந்தியாப் போக மனசு வந்தது?? சண்டை போடுறதுனாலும் கூடவே வந்து சண்டை போடுன்னு என்னையும் நீ வலுக்கட்டாயமாக கூட்டிப் போயிருந்திருக்கணும்ல?”என்று கேட்டாள் யௌவனா. 

தன் மனைவி தன்னை எப்படி எப்படியெல்லாம் பார்வை பார்க்க வேண்டும் என்று நினைத்தானோ? அது போன்ற ஓர் பார்வை.. அவன் ஊடலுற்றிருக்கும் மனைவி பார்க்க, 

நிஜமாகவே தன் கோபத்தைக் கொஞ்சம் ஒத்தி வைத்தான் அவன். 

“ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்..நிஜமாலுமே நீ இல்லாம இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு புரிஞ்சுக்கிட்டேன்.. இருபத்திநான்கு மணி நேரமும் என் கூடவே இருந்து சண்டை போடு… இப்போ… வாமா வீட்டுக்குப் போகலாம்..”என்று தாழ்ந்த குரலில் அழைத்துப் பார்த்தான் சத்யன்.. 

கணவனின் தாழ்ந்த மெல்லிய குரல்.. அவளின் மனதை மெல்ல மெல்ல கரைக்க, அவனை நாடிப் போனவள் செய்தது எல்லாமே அதிரடி. 

அவனது கழுத்தில் மாலை போல கரம் கோர்த்து, தன்னை நோக்கி இழுத்து.. அவனது முரட்டு இதழ்களோடு.. தன்னதரங்களை இணைபிரியாதது போல ஒற்றலானாள் அவள். 

சத்யாதித்தனோ.. மனைவியாகவே தந்த அந்த மென்மையான அடாவடி முற்றத்தில் சகலமும் தொலைந்தது போல.. விழிகளை அகல விரித்து… அப்படியே நின்றான். 

இது நனவு தானா? இல்லை முன்பு போல் தூக்கத்திலிருந்து கனவு காண்கின்றானா அவன்? 

கணவன் அதிர்ச்சியில் கல்லாய் சமைந்து நின்றதைப் பார்த்து, அவள் வாய் பொத்திக் கிளுக்கிச் சிரித்த வேளை, அந்த சிரிப்பின் நாதத்தில் சிந்தை தெளிந்தவனுக்கு, நடப்பது அத்தனையும் கனவல்ல நிஜம் என்பது புரியலாயிற்று. 

சத்யனுக்கு.. மனைவியின் கண்களில் பூத்திருந்த நேசம்.. ஏதோ செய்வது போல இருக்க, அந்த செங்காந்தள் மலரினை ஒத்த விழிகளையே இமைக்காது பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன். 

அவனுக்கென்றே பிரம்மன் படைத்த அந்த யௌவன மங்கையோ.. மெல்ல தன் தலைவனை நோக்கி ஓரெட்டு எடுத்து வைத்து வந்து, 

அவனது பரந்த மாரில்.. தன் மெல்லிய கொங்கைகளை மோதி நின்றவள், அவன் கழுத்தில் மாலை போல கோர்த்தவளாக.. அவனது அதரங்களை நாடிப் போனவள், 

சர்ப்பம் போல புஸ் புஸ்ஸென்று மூச்சு விட்டுக் கொண்டே.. அவளை மந்தகாசப் புன்னகை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். 

சத்யாவும், யௌவனாவும் ஒன்றாகயிருந்தால் தான் யாருக்கு வியர்க்குமோ இல்லையோ? ஆனால் அந்தப் பொல்லாத மாய நந்தினிக்குத் தான் மூக்குக்கு மேலே வியர்த்து விடுமே?? 

இராஜசிங்கர்களின் பொக்கிஷம்.. இருநூறு வருடங்களுக்கும் மேலாக துயின்று கிடக்கும்.. அந்த நிலவறையிலிருந்து.. அந்தக் காதல் ஜீவிகளின்.. கூத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் வயிறு பற்றியெரிந்து கொண்டிருந்தது. 

நாசித்துவாரம் விடைத்து விடைத்து அடங்க.. கை முஷ்டிகளை மடக்கிக் கொண்டு மூச்செடுத்துக் கொண்டிருந்தவளுக்கு, சத்யனினதும், யௌவனாவினதும் மனமாற்றம் காதில் புகை வராத குறையாக எரிச்சலைக் கொடுத்தது. 

அவள் அந்த நிலவறையில் கோபம் உச்சிக்கு ஏற.. கைகளைப் பிசைந்து கொண்டே அங்குமிங்கும் நடந்தாள். 

அவளைச் சுற்றி வானவில் வளையம் போல இருந்த ‘ஆரா’ அவள் கொண்ட கோபத்தினால் கடுஞ்சிவப்பு நிறமாக உருமாறியது. 

அது என்ன ‘ஆரா?’ என்ற வாசகர்களின் மனக்கேள்விக்கு, விடையளிப்பதே.. இத்தருவாயில் சால உசிதமானது. 

மனித உடலிலும் சரி.. அல்லது உடலை விட்டு உயிர் நீங்கிய பின்னர் எஞ்ஞான்றும் அழியாத ஆத்மாவிலும் சரி… கண்ணுக்குத் தெரியாத ஆகாய / மின்காந்த சக்தி புலன் தான் இந்த ‘ஆரா’. 

பிராண சக்தியால் உருவான ஆரா வண்ணமயமானது. அது வானவில்லை போல் நம்மைச் சுற்றி உள்ள சூரிய ஒளியில் இருந்து தன் நிறங்களைப் பெறுகிறது.

உடலில் இரத்தம் பாய்வதைப் போல, பிராணா எனப்படும் சூட்சும சக்தி நமது ஆராவில் பாய்ந்து கொண்டிருக்கிறது.

 அந்த பிராணசக்தி ஓட்டத்தில் ஏதாவது குறுக்கீடோ அல்லது தடையோ ஏற்பட்டால் உடலில் வலி, அசௌகரியம் அல்லது நோய் தோன்றும். 

இயற்கையாக ஒருவர் எதிர்மறை எண்ணத்துடன் இருந்தாலோ அல்லது வலுவற்ற ஆராவைக் கொண்டிருந்தாலோ அவரின் ஆரா நிறைய எதிர்மறை சக்தியை கிரஹிக்கும்.

மேலும் நாம் காட்டும் உணர்ச்சிகளுக்கு அமைய அந்த ஆராவின் நிறம் மாறுபடும்.

 சாந்தியடையாத ஆத்மாவான நந்தினி.. அன்று அங்கணம் கொண்ட கோபத்தின் விளைவாக ‘கடுஞ்சிவப்பு’ நிறமாக மாறியது அவளைச் சூழ இருந்த ‘ஆரா’. 

‘விடக்கூடாது.. இவர்கள் சங்கமிக்க விடவே கூடாது’என்று சொல்லிக் கொண்டேயிருந்தவளின் புருவங்கள் முடிச்சிட்டு ஒரு தீவிர யோசனைக்கு ஆட்பட்டிருந்தது. ஆயினும் அவளது அலைக்கழிப்பான நடை மட்டும் நிற்கவேயில்லை. 

சட்டென்று திருப்தி.. ஆக்ரோஷ முகத்துடன் அமைதியாக நிற்கும் தன் தாயினைப் பார்த்தவள், ‘என் செய்வேன் காளீஈஈஈ?? நானிங்கு மோட்சை அடையாமல் ஓர் உன்னத செயல்த்திட்டத்துடன் காத்திருக்க.. அவர்கள் மட்டும் கூடி சல்லாபம் அனுபவிப்பதா?? இதை என் மனம் எப்படி பொறுக்கும் காளீஈ?? … தாய்யேஏஏ… உன் மதலையின் குறையை கண்ணீருடன் செப்பும் போதும்… காது தாழ்த்திக் கேளாயோ?? இல்லை நீ செவிடா?? இன்றேல் கல்லே தானோ?”என்று அந்த நிலவறையே அதிரக் கத்தி இறைஞ்சியவள், அலைக்கழிப்புடன் தொடர்ந்து நடந்தாள். 

தன் வாரிசை அழித்தவனின் வாரிசின் வம்சம் வளரவே கூடாது என்று மட்டும் திண்ணமாக இருந்தவளின் நடை, ஒரு பலத்த யோசனைக்குப் பிறகு நின்றது. 

கரும்புகை போல கிளம்பி தன் நிலவறையிலிருந்து வெளியே, அந்தப் பொல்லாத கற்திடலுக்கு வந்தவளுக்கு யௌவனாவின் மதியை மயக்கி.. எப்படியாவது சத்யனை அவளோடு இணைய விடாமல் தடுப்பது ஒன்றே நோக்கமாக இருந்தது. 

அவள் தான் போகிற போக்கின் வேகத்தில்.. தரையில் கிடந்த காய்ந்த சருகுகளையும், மண்ணையும் எழுப்பிவிட்டுக் கொண்டே… தன் கூந்தல் அந்தரத்தில் அக்னிச்சுடர் போல எழுந்து அலைபாய..ஒரு சூறாவளி பெண்ணுருவம் கொண்டது போல நடந்தாள். 

யௌவனாவும், சத்யனும் ஒருவரை ஒருவர் நெருங்கி நின்றிருக்கும் அந்தக் கல்மலையின்… கல்மேடையை நாடி நடந்தாள் நந்தினி. 

அவள் இதயத்தில்.. இரண்டு நூற்றாண்டுகளாக அணையாத ஒரு பழிவெறித் தீ இன்னும் இன்னும் பற்றியெரிந்து கொண்டேயிருக்க, அவள்… அவர்களை நோக்கி கொலைவெறி சிந்தும் விழிகளுடன் நடந்தாள். 

இந்தத் தலைவனும், தலைவியும் தமக்குள் இருக்கும் ஊடல் மறந்து கூடல் கொள்ள… வேறு இடமா கிடைக்கவில்லை?? 

வீட்டில் இருக்கும் போதே ஆயிரம் முயற்சிகள் செய்து பிரிக்க முயல்பவள் நந்தினி. இப்போது அவளது எல்லையிலேயே இந்த கூடல் கூத்துக்கள் அரங்கேற எத்தனிக்கும் போது விடுவாளா? 

அப்படி அவள்.. அவர்களை நோக்கி கல்மண் தெரியாமல்… அசுர வேகத்தில் நடந்து வந்து கொண்டிருந்த போது, அவளது கோபத்தை மட்டுப்படுத்தி சித்தம் மயக்கும் வண்ணம் கேட்டது இனிய புல்லாங்குழல் இசையின் நாதம். 

அவளது காதுவழி இதயம் அடைந்து… அவளது நாடி, நரம்பெங்கும் பரவி.. இத்தனை நேர பழிவெறி அடங்கி.. மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக, அவளை ஓரடி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே கட்டிப் போட்டது அந்தப் புல்லாங்குழலிம் இன்னிசை கீதம். 

நந்தினியின் கோப விழிகள்.. அப்படியே போய் மேல் சொருகிக் கொள்ள, ஏதோ போதையில் ஆடுவது போல.. கண்கள் மூடி அந்த இன்னிசையில் தேவலோகத்துக்கு சஞ்சரிக்கலானாள் நந்தினி. 

அத்தனை இனிய கீதம் அது. கோபியர்களின் கண்ணனும் இப்படித் தான் புல்லாங்குழல் இசைத்தானோ? கோதை நப்பின்னையும், ராதையும் மனம் மயங்கி நிற்கும் வகையில், கண்ணனும் இப்படித்தான் இசைத்து மயக்கினானோ?? 

மிகுந்த நேரமாக இசைத்துக் கொண்டே சென்ற அந்தக் குழலின் நாதம் பட்டென்று நின்று விட, ஏதோ இனிமை மயக்கத்திலிருந்து.. வெளியே வந்து.. கண் திறந்தவளுக்கு, அந்தக் குழல் நாதம் இன்னும் இன்னும் வேண்டும் என்பது போல பரிதவித்தது மனம். 

சட்டென விழிகள் திறந்தவளின் அந்த கருமணிகள்.. அந்தக் குழலை இசைத்தது யார்? ஏன் நின்று போனது? என்ற ஆற்றாமையுடன்… விழிகளை அங்குமிங்கும் சுழற்றிச் சுழற்றித் தேடலானாள். 

அதோ அவள் விழிகள் அந்தக் குழல் இசைத்த மாயக்கண்ணனைக் கண்டு கொண்டது. அது வேறு யாராகத் தான் இருக்க முடியும்? 

அது அவள் எஞ்ஞான்றும் காதல் கொள்ளப் பிரியப்படும் ஓர் சூரியவதனம் அல்லவா?? அது அவளது தேவதாவே தான். 

அவன்.. மனைவியின் சீற்றம் அடக்கிய வேளையில்.. மனைவியைச் சுற்றி ஒளிரும் ஆரா.. அவள் சாந்தமாகியதில் மெல்ல மெல்ல வெள்ளை நிறமாக மாறிப் போனதைக் கண்ட தேவதா தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டான். 

அவளது அன்பு தேவதா.. அங்கே இருந்த பெரும் பெரும் விழுதுகள் தொங்கிக் கொண்டிருந்த மராமரத்தின் தாழ்ந்த கிளையொன்றிலேயே.. சாய்ந்து படுத்து… 

தன் ஒரு காலுக்கு மேலே இன்னொரு கால் போட்டவனாக.. அமர்ந்து.. அந்த இனிய குழலை வாசித்திருந்திருக்கிறான் என்பதை… அவனது கையில் இருந்த குழலே பறைசாற்றிக் கொண்டிருந்தது. 

மனைவி தன்னை அவதானிப்பது உணர்ந்ததும்.. அவன் முகமெங்கிலும் ஓர் கொள்ளை அழகு சிரிப்பு எழுந்து பரவ, 

அந்தத் தாழ்ந்த மரக்கிளையை விட்டும் இறங்கி… அவளை நாடி வந்தான் தேவதா. 

தன் கணவன்.. அவர்களது இறுதிச் சந்திப்பின் போது.. அவளை நாக்கூசாமல், ‘எச்சில்பண்டம்’ என்றது ஞாபகம் வரலானது அவளுக்கு. 

அந்த நாராசமான சொல்லை தேவதா உதிர்த்ததும் நல்லதற்கே!!

 அவன் உதிர்த்த ஒற்றைச் சொல் அல்லவா அவளை மீண்டும் யௌவனா உடம்புக்குள் புக இயலாதவாறு மன உளைச்சலைக் கொடுத்துக் கட்டிப் போட்டது? 

அவனது, ‘எச்சில் பண்டம்’ என்ற சொல்.. நந்தினியின் இதயத்துக்குள் எழுந்து அவளை ஆக்கிரமித்துக் கொள்ள, மீண்டும் அவளது ஆரா.. மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கடுஞ்சிவப்பு என மாறி.. உச்சபட்ச கோபத்தின் அறிகுறிகளைக் காட்டலானது. 

அதனால் தேவதாவின் முகத்தைக் கூட காணப்பிடிக்காதவள் போன்று.. அவள் தன் முகத்தைக் கடுகடுவென்றாக்கிக் கொண்டு.. அவனை விட்டும் முன்னேறி நடக்க, தன் மனைவியின் முன்னங்கையை ஆசையுடன் பற்றிக் கொண்டான் தேவதா. 

கணவனின் இராட்சத கைகளுக்குள் அடைக்கலமானது, நந்தினியின் மென்மையான வளைகைகள். வலிக்கவேயில்லையாயினும் கூட.. அவனது பிடி உடும்புப் பிடியாகவே தெரிந்தது அவளுக்கு. 

மெல்ல திரும்பி தன் கையைப் பற்றியிருக்கும் அவன் கையையும், அவனது இராட்சத வதனத்தையும் மாறி மாறிப் பார்த்தவள், முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு, “என்ன வ்விளையாட்டு இது தேவதா? முதலில் என் கையை விடுங்கள்”என்றாள் நந்தினி. 

நந்தினியை விடவும் பொல்லாத மாய தேவதாவோ.. ஒளித்து மறைத்து ஒரு சிரிப்பை சிந்தியவண்ணம், கண்களில் விஷமம் பொங்க, “உன்னுடன் நான் விளையாடாமல்.. வேறு யார் விளையாடுவது?” என்று கேட்டானாயினும்.. அப்போதும் கூட.. மனைவியின் கைகளை அவன் விடுவிக்கவேயில்லை. 

அவனது விழிகளையே உற்று நோக்கியவள், சினத்துடன், “எச்சில்பண்டம் இப்போது இனிக்கிறது போலும்?”என்று சரியான இடத்தில் தாக்கிப் பேசினாள் நந்தினி. 

ஆனால் ஈசனின் அம்சமான ஜடாமுடிக்காரனோ.. மனைவியின் வார்த்தைகளை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல்.. அவள் மனதில் இருப்பதை அப்படியே கொட்டட்டும் என்பதைப் போல… அமைதியாக.. 

தன் அழகு நந்தினியின் ஆசைமுகம் பார்த்தபடியே நின்றிருந்தான் அவன். 

அவளோ ஆற்றாமை தாங்க முடியாது.. தன் தனங்கள் ஏறி இறங்க, “.. நான் நாடியிருந்தால் சத்யனோடு இணைந்திருப்பேன்…அப்படி இணைந்ததும் என் விஷம் அவனில் இறங்கிய கணம் அவனும் இறந்திருப்பான்.. அவனைக் கொல்ல சுலப வழியிருந்தும்..இந்த மகாசேனருடன் சங்கமித்த நந்தினி.. சத்யனுடன் இணைய பிரியப்படாமல்.. இன்னும்.. வழி தேடிக் கொண்டிருக்கிறேன்.. ஆனால் நீரோ? … ‘எச்சில்பண்டம்’ என்ற ஒற்றை வார்த்தையில்.. என் இதயத்தைக் குத்திக் கிழித்து விட்டீரே?” என்று நெஞ்சு விம்மித் தணிய பொருமலானாள். 

அந்த ஜடாமுடிக்காரனோ.. ஏதும் பேசாமல்.. தான் பற்றியிருந்த அவள் கையினைத் தன்னை நோக்கி இழுத்து, அவளைத் தன் மார்பில் போட்டுக் கொண்டவனாக, 

அவள் இடையை தன் கைகளில் சுற்றி வளைத்து, “மன்னித்து விடு… அது கோபத்தில் சொன்னது.. வெறுமனே இதழ்களில் இருந்து வந்தது.. இதயத்திலிருந்து அல்ல நந்தினி”என்று அவளைத் தன் காதல் வலையில் வீழ்த்தி… அவள் கோபத்தைக் காதலால் வென்றிட முனைந்தான் அவன். 

தேவதாவின் பிடியின் வலிமை இன்னும் இன்னும் அவளை ஏதோ செய்ய, அவனது விழிகளைப் பார்த்திருக்க மருகியவளாக, “விடுங்கள் என்னை.. வ்விடுங்கள்”என்றபடி.. அவனிலிருந்தும் வெளிவரத் துடித்தாள் அவள். 

அவனோ அவள் நாசியை நாடி வந்து, தன் நாசியால்.. அவள் நாசியை உரசி விட்டவனாக, மந்தகாசமான குரலில், “ம்ஹூஹூம் முடியாது.. உன் தேவதாவைக் கண்டதிலிருந்து ‘நான் வேண்டும்.. நான் மட்டும் தான் வேண்டும்’என்றாய்?? இப்போது நானே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்.. நான் வேண்டாமா?”என்று அவன் கேட்ட ஒற்றைக் கேள்வியில் உலகம் சுற்ற மறந்து போனது அவளுக்கு. 

நிஜமாகவே.. அவளைத் தேடி வந்திருப்பது.. கண்களில் காதல் சொட்டச் சொட்ட அவளைப் பார்ப்பது… அவள் மனம் விரும்பும் வகையில் பேசுவது அவளது காதல் கணவனே தானா? 

எப்போதும் எதிரும், புதிருமாக இருக்கும் அவளது ஜடாமுடிக்காரன்!! 

எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் உருத்திராட்ச மாலைக்காரன்!! 

இவள் வான் என்றால்.. அவன் பூமியாக நிற்கும்.. அவளது அன்புள்ள எதிரி.. இன்று அவள் மேல் காதல் இழையும் வார்த்தைகள் பேசுவதில்.. திக்கு முக்காடிப் போனாள் நந்தினி. 

இந்தக்காதல் மானுடர்களையும் விட்டு வைப்பதில்ல என்றால்.. ஆத்மாக்களின் நிலையோ.. மானுடர்களை விடவும் பரிதாபம்!! 

அவன் கண்களிலிருந்து வந்த காந்தம் அவளையும் தாக்குவது போல இருக்க, தான் நிலவறையிலிருந்து வெளியே வந்த பொல்லாத காரியமும் கூட மறந்து போனது அந்த காந்த விழிகளின் காதல் வீச்சினைக் கண்டு. 

 

மனைவியின் திமிறல், திணறல் எல்லாமும் அடங்கிப்போனதைக் கண்டவன், அவளது காதுக்குள் தன் இதழ்கள் நுழைத்து, மிருதுவான குரலில், “இந்த ஏகாந்த இரவு.. நமக்காக மட்டும்..” என்று சொன்னதும், 

அந்தக் குரலின் வீரியத்தில்… அவளது உடலில் இருக்கும் கோடான கோடி மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொள்ள, அந்த ஈசனின் தரிசனம் போல.. அவனது காதல் முகம் அத்தனைப் பரவசத்தைக் கொடுத்தது அவளுக்கு. 

அன்று தேவதா.. இதுவரை மனைவியிடம் அவள் காட்டிராத ஓர் முகத்தைக் காட்டிட ஆசை கொண்டான் போலும். அவளே எதிர்பாராத கணம், சற்றே குனிந்து ஓர் மதலையைத் தூக்குவது போல, 

ரொம்பவும் அநாசயமாக.. அவளது தொடைகளினூடாக ஓர் கை, இடையினூடாக ஓர் கையிட்டு.. அவளைத் தன் பரந்த மாரோடு அணைத்துத் தூக்கிக் கொண்ட கணம்.. அவனது முதுகின் சருமத்தைக் கிழித்துக் கொண்டு.. விர்ரென்று முளைத்தது இரு இராட்சத இறக்கைகள். 

பரிசுத்தமான வெள்ளை நிறத்தில்.. கழுகு இறக்கைகள் போல ரொம்பவும் அடர்த்தியான சிறகுகள் கொண்ட இறக்கை அது!! 

சற்றே முழங்காலை ஊன்றி உந்தியவன், தன் மனைவியைக் கைகளில் ஏந்திக் கொண்டு சுழன்றவன், சந்தோஷமாக, “ஹூஹூஹூஊ” என்றபடி போனான் வானின் உச்சத்தை நோக்கி. 

நந்தினிக்கோ… கணவனிடம் இறக்கைகள் இருப்பது கண்டு ஆச்சரிய அதிர்ச்சி என்றால்.. அவன் தன்னை அநாயசமாக ஏந்திக் கொண்டு பறப்பது.. எங்கே தன்னை கீழே போட்டு விடுவானோ? என்ற அச்சத்தையும் ஒருபுறம் கொடுக்கலானது. 

அந்த அச்சத்தின் விளைவாக… கணவனின் கழுத்தை.. அவள் இறுக்கிக் கட்டிக் கொண்ட தினுசைக் கண்டதும்.. அவனுள்.. அவள் மேலிருக்கும் அன்பு இன்னும் இன்னும் அதிகமாகிக் கொண்டே போக, அவள் அச்சம் தீர்க்கும் வகையில்.. தன் வேகத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தினான் அவன். 

அவளுக்கு அது புது அனுபவமாக இருந்தது. எப்போதும் தூரத்தில் இருந்து பார்க்கும் நிலவும்..மிகவும் அருகாமையில்.. மிகப்பெரும் வட்டமாக காட்சியளிப்பது போல இருந்தது. 

மலைமுகடுகளைச் சல்லாபித்து காதல் கொள்ளும்… அந்த வெண்பஞ்சு மேகங்களை எல்லாம்.. தன் இறக்கைகளால் கிழித்துக் கொண்டு பறப்பது அலாதி ஆனந்தமாக இருந்தது. 

உயரத்திலே இருந்து.. கீழே கன்னங்கரேர் என்று இரவின் இருளுக்குத் தெரிந்த.. தம்பதிவனத்தின் காட்டைப் பார்க்கும் போதும்.. அதன் இடையில்.. பாம்பு போல சுற்றி வளைத்து ஓடும் மகாவலி கங்கையைக் காணும் போதும்… 

அவள் வாழ்ந்த இடம் எத்தனை அழகு என்றே தோன்றியது அவளுக்கு. 

தேவதாவுக்கு.. மனைவி தன் வலிய உடலை இறுக்கி அணைத்திருப்பது கண்டதும்.. அவனுள்ளும் ஏதேதோ உணர்ச்சிப் பிழம்புகள் ஊற்றெடுத்து ஓடிக் கொண்டிருக்க, அவளது இடையைப் பிடித்திருந்த அவன் பிடி இன்னும் கொஞ்சம் வலிமையானது. 

அதிலும் அவளது கூந்தல்வாசனை.. அவனது நாசிக்குள் புகுந்து அவனை மனம் மயக்கும் போல இருக்க, அந்த இரவில் ஒரு குறுந்தூர பயணத்தின் பின்னர் வந்தது.. ஆள் அண்டா காட்டின் அடர்த்தியான பகுதி!! 

ஓர் பெரும் நீர்வீழ்ச்சி உச்சியிலிருந்து உதித்து.. அது கொட்டுவது பாலையா? நீரையா? என்று ஒரு தோற்றமயக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்க, 

அந்த நீர்வீழ்ச்சியின் இடையில் இருந்த ஒவ்வொரு கற்களிலும் ஒருவித மாயச்செடிகளும், விதம் விதமான நிறங்கள் கொண்ட பூக்களும் முளைத்திருக்க.. அவற்றைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன பட்டாம்பூச்சிகள். 

அந்த இடமே அத்தனை இரம்மியமாக இருக்க.. அந்த நீர்வீழ்ச்சியின் மத்தியில்.. நீர் தழுவி ஓடிக் கொண்டிருந்த பெரும் பாறாங்கல்லில்..பவ்யமாக வந்து தன் மனைவியுடன் தரையிறங்கியவனின் கண்கள் முழுவதும்.. மனைவியிலேயே தான் காதலுடன் பதிந்திருந்தது. 

அவளோ தன் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் ஆள் அண்டா காட்டிலும் இப்படியொரு வனப்பான வனநிலமா? என்று ஆச்சரியக் கண்களுடன்.. அந்தப் பூக்களையும், அவற்றில் தூங்கி இன்பம் துய்க்கும் பட்டாம்பூச்சிகளையும் பார்த்தபடியே இருக்க, 

மீண்டும் அவளை அதிரடியாகத் தூக்கிக் கொண்டவன், “இன்னுமொன்றும் உன் பார்வைக்குண்டு.. என்னோடு வா” என்றவன்.. அவளைத் தூக்கிக் கொண்டு பறந்து.. அந்த நீர்வீழ்ச்சியின் உச்சத்துக்கே போனான் அவன். 

நீர்வீழ்ச்சியின் உச்சத்தின் பசுமை.. பார்ப்பார் யாவரினதும் மனம் மயக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. அவளது உள்ளங்கால்கள்.. அந்த இரவு நேரப் புல்லில் தூங்கும்.. பனியின் குளிர்மையை ஜில்லென்று உணர்ந்து கொண்டிருந்தது. 

அவளை நாடி சில்மிஷம் புரியும் விழிகளுடன் வந்த தேவதாவின் விழிகள் அவள் மேல் கொண்ட காதலின் விளைவால் செந்நிறம் கொண்டிருக்க, இத்தனை நேரம் அவள் உடலும், அவன் உடலும் உரசிக் கொண்டதில் விளைந்த உஷ்ணம் தாங்க மாட்டாமல், 

அவளை நாடி அசுரவேகத்தில் வந்தவன்.. அவளது பிடரிமயிரை அடாவடியாகப் பற்றிச் சாய்த்து.. நந்தினியின் ஈர இதழ்களை.. அதிரடியாக தன் இராட்சத இதழ்களால் முற்றுகையிடலானான். 

இடைவெளியே கொடுக்காது.. தன் உமிழ்நீரை உறிஞ்சி எடுத்துச் சுவைத்துக் கொண்டிருக்கும் தேவதாவின் தாபமுகம் பார்த்த கணம், 

அவளுக்குள்.. இவன் என்னால் மட்டுமே மயக்கப்படக் கூடியவன் என்ற பெருமை எழுந்தது. 

நிச்சயமாக இந்த ஒற்றை இதழ் முத்தத்தை கூடலுக்கு வித்திட்டால், சத்யனுக்கு அரணாக இருக்கும் தேவதாவை எப்படியாவது தன் வசம் வீழ்த்தி விடலாம் என்ற எண்ணம் பிறந்தது அவளுக்கு. 

அதனால் அவளது நகங்களை.. அவளது முதுகில் புதைத்து.. அவற்றைத் தடவி விட்டு.. மெல்ல மெல்ல அவனது பிடரிமயிரை அளைந்து.. கூடலுக்கு சொல்லாமல் அழைப்பு விடுத்தாள் அந்த மாய நந்தினி. 

ஆனால் தன் மனைவியின் மாய எண்ணங்கள் அறிந்து.. அதற்கும் மேலாக ஓர் பொல்லாத திட்டத்தைத் தீட்டியிருந்த தேவதாவோ, 

தாபத்தின் உச்சத்தில்.. அவளை இன்னும் இன்னும் சேர்த்து அணைத்துக் கொண்டு… சர்ப்பம் போல உஷ்ணப்பெருமூச்சுக்கள் விட்டுக் கொண்டே பின்னே பின்னே சென்றான் தேவதா. 

சரியாக.. அவன் இலக்குவைத்த ஓர் இடத்தில் அவள் கால்கள் நின்று.. அங்கிருந்த ஓர் இரும்புப் பொறியில்.. நந்தினியின் கால்கள் சிக்குண்ட அடுத்த நொடி… அவளை விட்டும் ஒருவித வெற்றிக்களிப்புச் சிரிப்புடன் விலகிக் கொண்டான் தேவதா. 

நந்தினியோ..மாந்தர்கள் யானைப் பிடிப்பதற்கு பயன்படும் ஓர் இரும்புப் பொறி போல.. ஒரு பொறியில்.. தன் பாதங்கள் அகப்பட்டுக் கொண்டதைக் கண்டதும், கால்களை அசைத்துப் பார்த்தவள், அதற்கு முடியாமல் அதன் இரும்புச் சங்கிலி.. அருகில் இருக்கும் மராமரத்தில் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள் நந்தினி. 

கணவனிடம் உதவி கேட்க நாடியவளாக, “என்ன.. பார்த்துக் கொண்டிருக்..” என்றவளாக நிமிர்ந்த போது.. தேவதாவின் முகத்தில் ஓடிய வெற்றிக்களிப்புச் சிரிப்பு அவளைக் கட்டிப் போட்டது. 

அவனது சிரிப்பே.. அவளது புருவங்களை இடுங்கச் செய்ய, “தேவதா என்ன இது..?”என்றவளுக்கு, அவனது சூட்சுமம் புத்தியில் உறைக்கவாரம்பிக்க,

மீண்டும் அவளது ஆரா கடுஞ்சிவப்பு நிறமாக மாறத் தொடங்க, “இது எல்லாம் உங்கள் சூட்சுமம் தானாஆஆ? காட்டின் ஆழத்திற்கு.. காதலைக் காட்டி அழைத்து வந்து.. காரியம் சாதித்து விட்டீரோ? இது தான் நீர் சொறிந்த காதலின் பின்னுள்ள குயுக்தியா?”என்று கேட்டுக் கேட்க, 

சின்னக் குற்றவுணர்வுடன் தலைகுனிந்தவன், “என் அரசரை உன்னிடமிருந்து காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை நந்தினி.. நாம் வாழ்ந்து முடித்தவர்கள்.. அன்பின் புள்ளியில் ஆரம்பித்த நம் வாழ்க்கை.. எப்படியோ முடிந்து போனது!! ஆனால் அந்த இளம் தம்பதியினரின் வாழ்க்கை.. ஆரம்பிக்காமலேயே முடிந்து போக வேண்டுமா?? அதனால் தான் இவ்வாறு செய்தேன்.. நீயின்றி.. சிறிது காலம்.. அவர்கள் சந்தோஷமாக இருக்கட்டும்”என்றவன், 

சட்டென தன் வலிய கைகள் நீட்டி.. அவள் இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த சின்னக் கண்ணாடிக் குடுவையை.. அவள் சுதாரிக்கும் முன்னர் பிடுங்கி எடுத்துக் கொண்டான் தேவதா. 

அந்த ஒருவிரல் நீளமுள்ள மாயக்கண்ணாடிக் குடுவையில் அடைக்கலமாகியிருந்தது.. சந்திரகிரகணத்தின் போது தேவதாவுடன் இணைந்த வலிமையால்.. அவளுக்கு கிட்டிய தீய ஆத்மா.

தேவையான சமயங்களில் மாத்திரமே.. குடுவையைத் திறந்து.. நந்தினி தன் அடியாளான தீய சக்தியை ஏவி விடுபவளாக இருக்க, மிகுதி நேரத்தில்.. அவள் இடுப்பில் இருக்கும் குடுவையில் பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கும் அது!! 

அவள் சிறையிருக்க.. தீய சக்தியால் தன் அரசருக்கு கெடுதி விளையும் என்றனுமானித்துத் தான்.. அதனைத் தனியாகப் பிடுங்கியெடுத்துக் கொண்டான் தேவதா. 

நந்தினி கால்கள் அகப்பட்ட பொறியிருக்கும் இடம் அது சாதாரண இடமல்ல. 

அடங்காத தீய ஆத்மாக்களை.. தேவதாக்கள் இழுத்து வந்து கட்டும் மாயப்பொறி கொண்ட பிரதேசம் அது!! 

இனி அவனாகவே வந்து விடுவிக்கும் வரை.. நந்தினிக்கு விடுதலை என்பது சந்தேகமே. இருப்பினும் இந்த மாயப்பொறி… மானுடக்கண்களுக்கு இரும்புப் பொறியாகவேப் புலப்பட.. ஏதாவது ஒரு மானுடன்.. அவளை அந்த பொறியிலிருந்து விடுவித்தாலே ஒழிய விடுதலை என்பதே இல்லை. 

நந்தினிப் பாய்ந்து வந்து… அவன் கையிலிருக்கும் அந்தக் கண்ணாடிக் குடுவையை எடுக்க எத்தனிக்க, அதற்கு விடாமல் பின்னே பின்னே சென்று கொண்டேயிருந்தான் தேவதா. 

கோபத்தின் உச்சத்தில் விழிகள் கண்ணீர் மல்கச் சிவக்க, “யாரிடமிருந்து கற்றீர் இந்த ஏமாற்றும் வித்தையை?? இது இழி செயல்..!!”என்று இரைந்து கத்தினாள் மனைவி. 

அவனோ புன்னகைத்துக் கொண்டே, “என் மனைவியிடமிருந்து தான் கற்றேன்.. அன்பைக் காட்டி ஏமாற்றும் வித்தையை..”என்று எகத்தாளம் நிறைந்த குரலில் சொன்னவன், 

தற்போது சீற்ற விழிகளுடன், “நான் செய்தது இழி செயலாயின்… நீ என்னோடு சந்திராகிரகணத்தன்று இணைந்தது? அதற்கு பெயர் என்ன? ”என்று அவன் மறுகேள்வி கேட்க, அதற்கு பதில் பேச முடியாமல், அவமானத்தில் தலைகுனிந்து நின்றாள் அவள் அவஸ்தையுடன். 

ஓர் குறிப்பிட்ட எல்லை வரை பின்புறமாகவே நடந்து வந்தவன், அவன் நாடிய எல்லை வந்ததும்.. தன் விரல்களால் ஒலியெழுப்பி சுடக்கிட்ட அடுத்த கணம்..அவளைச் சூழ குபுகுபுவென்று வட்டவடிவமாக பற்றியெறிந்தது ஓர் நெருப்பு வளையம். 

அது அமானுஷ்ய சக்திகளின் கண்களுக்கு மட்டும் புலப்படும் நெருப்பு வளையம். 

இறுதியாக மனைவியை.. காதலும், அன்பும், குற்றவுணர்வும், தவிப்பும் மீதூறப் பார்த்தவன், அடுத்த நொடி இருதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு… அவளுக்குப் புறமுதுகிட்டவளாக நடந்தான். 

அவளோ கணவன் தன்னைத் தனியே தவிக்க விட்டுச் செல்வது தாங்க மாட்டாமல், “தேவதாஆஆ.. தேவதாஆஆ.. என்று கத்திக் கொண்டேயிருந்தாள் அவள். 

*****

அங்கே.. தன் மனைவியின் மனமாற்றத்தை தன் உள்ளத்திலிருந்து உணர்ந்து கொண்டிருந்தவன், அவளைப் பார்த்து மந்தகாசப் புன்னகை சிந்தியவனாக, “சரி வா.. போகலாம்… ரொம்ப இருட்டிருச்சு யௌவனா”என்று அவளை அழைக்க, அவளோ அவன் இழுத்த இழுப்புக்குச் செல்ல நாடவேயில்லை. 

அவனது கைகளோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு மீண்டும் அந்தக் கல்மேடையின் உச்சி விளிம்பை நாடிப் போனவள், 

பட்டென்று அதில் அமர்ந்து கொண்டவள்.. இன்னும் அமராத தன் தலைவனை அண்ணாந்து பார்த்தவளாக, “ப்ளீஸ் சத்யன்.. கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகலாமே?”என்று கண்களாலேயே இறைஞ்ச, அவள் மேலிருந்த ஆத்திரம் மட்டுப்பட்டிருந்த அவனும் அவள் பக்கத்தில் ஓர் விடலைப்பையன் போல அமர்ந்து கொண்டான். 

அந்தக் கல்மேடையில் இருந்து பார்க்கும் போது.. அதன் பார்வை மட்டத்தின் கீழே.. பலவிதமான புதர்ப்பற்றைகளும்.. ஒன்றிரண்டு மராமரங்களுமே இருக்க.. பூரணை நிலவு கொண்ட வானமோ.. அத்தனை எடுப்பாக இருந்தது விழிகளுக்கு. 

ஆங்காங்கே மினுமினுத்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்த யௌவனாவோ, அவற்றை ஆராதிக்கும் விழிகளுடன் பார்த்த வண்ணம், “இங்கேயிருந்து வானம் பார்த்தா செம்மையா இருக்கும் தெரியுமா?”என்று கேட்க, சத்யன் ஏதும் பேசாமல் யௌவனாவையே ஆகர்ஷிக்கும் விழிகளுடன் பார்த்திருந்தான். 

இது தான் அவனது யௌவனா. அவன் காதலிக்கும் உண்மையான அப்பாவியான யௌவனா என்று அவன் மனம் அவனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தது. 

அவர்களது காதல் எதிரியான நந்தினி தேவதாவால் மாய நெருப்பு வளையத்துக்குள் சிறை வைக்கப்பட்டிருந்ததாலோ என்னவோ.. இருவரும் வெகு நாள்க் கழித்து.. தங்களுக்குள் மனதால் நெருங்கி விட்ட ஓர் ஐக்கியத்தை உணரலாயினர். 

வானிலிருந்தும் விழியெடுத்து தன்னவனைப் பார்த்த யௌவனா, “சத்யன்.. இப்பவாவது நான் சொல்றதைக கேட்பீங்களா?”என்றவளுக்கு விழிகளில் நீர் கோர்க்கத் தொடங்க, 

“எனக்கு என்ன சுத்தி என்ன நடந்ததுன்னே புரியல.. பட் ஐலவ் யூ..”என்றவள்..அவனது விரல்களோடு மீண்டும் தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டே தலைகுனிய, 

அந்த சிப்பி போன்ற இமைகளில் இருந்தும் வழிந்தது கண்ணீர் முத்துக்கள். 

என்ன தான் கோபக்கார கணவனாக இருந்த போதிலும், மனைவியின் கண்ணீர் உள்ளூற ஓர் நெருடலைக் கொடுக்க, பட்டென்று கன்னம் தாங்கியவன், வழியும் நீர்க்கோடுகளைத் துடைத்து விட்டவனாக, “ஹேய்.. அழாதே”என்று சொல்ல, 

தன் கன்னம் ஏந்திய அவன் கையின் உள்ளங்கைக்கு முத்தமிட்டவள், தழுதழுத்த குரலில், “என்னை விட்டுப் போக மாட்டீங்கள்ல?”என்று கேட்டாள். 

அவன் இதழ்க்கடையோரம் ஓர் குறுஞ்சிரிப்பு பரவ, குறும்பாக, “எப்படி போறது? அதான் இராத்திரி ஆச்சுல்ல? நாளை காலையில் தான் போகணும்.”என்று சொல்ல, அதை உண்மையாக சொல்கின்றான் போலும் என்று சொல்ல, 

சோர்ந்த விழிகளுடன் அவனை நோக்கி, “எனக்கொரு சான்ஸ் தரப்படாதா? என்னோட அன்பை நிரூபிக்க?”என்று தயங்கித் தயங்கிக் கேட்க, 

இவனுக்கோ உள்ளுக்குள் ஒரே குஜாலாகப் போக, குறும்புக் கொந்தளிக்கும் விழிகளுடன், “எப்படி நிரூபிப்ப?”என்று கேட்க, ஏதோ ஓர் வேகத்தில் வார்த்தையை விட்டவன்.. எங்கணம் நிரூபிப்பது என்றறியாமல் திக்குமுக்காடிப் போனாள். 

அவள் அவஸ்தையுடன் நெருங்குவதைக் கண்டவன், இன்னும் கொஞ்சம் அவளை உசுப்பேற்றும் முகமாக, “கமான்.. ஷோ மீ.. ஹவ் கேன் யூ ப்ரூவ் இட்?”என்று கேட்க… அவனது விழிகளையே.. தன் தனங்கள் ஏறி இறங்க… ஒரு அலைக்கழிப்புடன் பார்த்திருந்தவளுக்கு… இதழ்கள் வரண்டு போனது. 

இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டே… அவனைப் பார்த்திருந்த போது.. மீண்டும் அவன், “கமான்.. எப்பட்..”என்று பேசிக் கொண்டிருந்த போதே.. அதற்கு மேலும் அவனை பேச விடாமல்.. அவனது முரட்டு அதரங்களைக் கவ்விக் கொண்டது ஓர் தேன்சிட்டு. 

தன் மேலதரங்களைப் பற்றிச் சுவைத்து சுவைத்து விடுவித்த வண்ணம்.. கண்கள் மூடி தன் காதலை நிரூபிக்க.. போராடிக் கொண்டிருக்கும் மனைவி எழுப்பிய இதழ்கள் நான்கின் சங்கம ஒலி வேறு அவனுள் புது இரத்தத்தைப் பாயச் செய்ய, 

உன்மத்தம் கொண்டது அவனது முழு உடலும். 

கைகளிரண்டும் அனிச்சைச் செயல் போல மேலெழுந்து.. அவளது கழுத்துவளைவு தடவி, கைச்சந்து தடவி.. அப்படியே கீழிறங்கி வந்து, அவளது பூவினும் மென்மையான மெல்லிடையைத் தடவி, 

அவளது மலைமுகடுகளை நிகர்த்த பெண்ணழகை நோக்கி முன்னேறிய சமயம்.. அவன் தொடுகையில் சிலிர்த்து அடங்கியது யௌவனாவின் தளிர் மேனி. 

இதழ்களின் மோனச்சத்தம் காற்றில் எழுந்து பரவ.. முதல் முத்த வேட்டையில் தலைவனைத் திருப்திப்படுத்திய விழிகளுடன்.. அவனதரங்களை விடுவித்து விட்டு…. காதல் இழையோட, ‘என் காதல் உனக்குப் புரிந்ததா?’என்பது போலப் பார்த்தாள் யௌவனா. 

யௌவனாவின் காதலை முழுமையாக உணர்ந்து கொள்ள முன்னாடி.. அவள் செய்த அன்பு முயற்சிகள் அவனுக்குப் பிடித்துப் போக..அவளைப் பார்த்து மூச்சிறைத்துக் கொண்டே புன்னகைத்தவன், 

தன் காதலின் உணர்ச்சிகள் வந்து கரை முட்ட, சட்டென தன் பெனியனைத் தூக்கி.. தலைவழியே விட்டெறிந்தவன், அவள் சேலைமுந்தானையையே போர்வையாகக் கொண்டு, தம்பதிவனக் காட்டில்.. ஒரு காதல் கவிதை அவளுடலில்.. தன் அதரங்களால் கிறுக்கத் தயாரானான். 

பெண்ணவளின் உடல்.. அது படைத்த பிரம்மனுக்கே ஓர் முரண்பாடாக இருக்கையில்.. அவ்வுடலைக் கையாளும் ஆடவனோ எம்மாத்திரம்!! 

அவளது அழகை ஆராதிப்பதா? இல்லை இத்தனை அழகான ஓர் படைப்பா என்று பிரம்மனை நிந்திப்பதா? இல்லை.. அத்தனையும் சுகிக்க முன்.. விடிந்து விடுமா?? என்று தெரியாமல் பித்துப் பிடித்தவன் போலானான் சத்யன். 

கனவில் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த பால்பாயாசம்.. இப்போது நனவிலும். அவனுக்கோ.. மகிழ்ச்சியின் உச்சத்தில் மரணம் வந்தாலும் சம்மதமே என்பது போலவே இருந்தது. 

கணவன் இன்னும் தன்னைத் தீண்டாமல்… ஆகர்ஷிக்கும் விழிகளுடன் பார்த்திருப்பது கண்டு.. பெருமையோடு சின்னச் சீற்றமும் முளைக்க, 

அவனது கழுத்தில் இரு கைகளை கோர்த்து.. தன்னருகே இழுத்து தன் மார்புப் பள்ளத்தாக்கில் புதைத்துக் கொண்டவள்.. தன் ஆசையை சொல்லாமல் சொல்லும் வண்ணம்.. அவனது பரந்த நெற்றியில் குட்டிக் குட்டி முத்தங்கள் பதிக்கலானாள். 

அந்த ஈர எச்சில் முத்தங்களின் உஷ்ணமே… மனைவி தன் மேல் கொண்டிருக்கும் காதலை உணர்த்த, அவன் விழிகளில் ஒரு மன்மதக் கிறுக்கு குடியேறிக் கொண்டது. 

அவளது முன்னழகின் மேலான பிரதேசத்தில்.. கழுத்தின் கீழான பிரதேசத்தில் தன் ஆளுகையைத் தொடங்க நாடி.. பற்களின் அழுத்தத்தோடு.. அதன் சதைப்பற்றிக் கவ்விச் சுவைக்கலானான் சத்யன். 

எப்போதும் காற்று மட்டுமே தீண்டும் அவளது உடலின் சிலபாகங்களில்.. கணவனின் முரட்டு விரல்களும் உள்நுழைந்து சென்று வந்த சுகத்தில்.. அவள் உடலிலும் இத்தனை உணர்ச்சிப் பெருக்குகள் ஒளிந்திருக்கின்றனவா என்று.. அவளையே சந்தேகம் கொள்ள வைத்தது அவளது உடல். 

அந்த இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட இந்தியக் கரடியோ.. அவளது மலைமுகட்டில் ஏறி.. உச்சித்தேன் பருகும் வேலையில் ஈடுபட்டிக் கொண்டிருக்க.. 

இனிய கூடலில் தன் மனைவியை ஒரு தேவியைப் போல கைகளாலும் இதழ்களாலும் எப்படி உணரவைப்பது என்பதை அறிந்து கொண்டிருந்தான் சத்யன். 

காதல் இலக்கண மாணவர்களான அவனும், அவளும்.. அந்த கல்மேடையில் விடிய விடிய மெய்ப்புணர்ச்சி இலக்கணம் படித்துக் கொண்டிருந்த உன்னத நேரம் அது. 

இந்தியா செல்ல எதிர்பார்த்திருந்தவனுக்கு.. எதிர்பாராமல் கிடைத்த சமபந்தி போஜன விருந்து அது!! 

பலநாள் பசியில் இருந்தவனா விடுவான்?? காற்றிலே எங்கும்.. அவர்களின் மதன வாசம் நிறைத்திருக்க, அவர்கள் கூடலைக் கண்டு கொண்டிருந்த மராமரங்களும், புதர்ப்பற்றைகளும் ஆடாமல் அசையாமல் நின்று போயிருந்தது அதனைக் கண்ட அதிர்ச்சியில். 

அவனது உடல் பாரத்தை சுமந்து கொண்டிருந்த மெல்லிடையாளின் கால்கள்.. அவன் இடுப்பைக் கிடுக்கிப் பிடித்திருக்க… சிற்றிடத்தை ஆக்கிரமிக்கும் பேரிடம் கொண்டவன் போல.. அவளது சிற்றிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டவன், 

அதிரடியாகவே தன் காதலைத் தொடங்கினான். 

அவளுக்கு தலைவனின் அதிரடி வலிக்கிறது. இடுப்பில் ஓர் வலியும் எழுந்து பரவுகிறது. இருப்பினும். அவன் மேல் தான் கொண்ட காதலை நிரூபிப்பதற்காக, 

அவனது ஒவ்வொரு அசைவும் தந்த இன்பமான வலியை… அவனது முதுகில் நகக்கண்கள் புதைத்து… கண்கள் மூடி.. ஓர் வேற்றுலகம் சஞ்சரித்தவளாக.. “சத்யாஹ்.. என் சத்யாஹ்” என்று பிதற்றிக் கொண்டே இன்பம் துய்த்தாள் அவள். 

உலகில் எந்த போதைப்பொருளும் சுவைப்பவருக்கும், சுவைக்கப்படும் பொருளுக்கும் இன்பம் கொடுப்பதில்லை. ஆனால் அதில் காதல் போதை மட்டும் விதி விலக்கு. 

அது புனிதமான போதை. அந்த போதைக்கடலில் பயணித்துக் கொண்டிருந்தவள்.. ரதியானால்.. அவளை சரியாக கைக்கொண்டிருப்பவன் அசல் மன்மதனேயானான். 

இனிமையான பயணம் அது. அவர்களிருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்த காதல் பயணம் அது!! 

அந்த சீரான கடற்பயணத்தில்.. ஓர் காரசாரமான சுழியும் வர.. அதில் அடிபட்டுக் கொண்டு போனவர்கள்.. அசைந்த வேகத்தில் கரைவந்து சேர்ந்த போது… “ஹாஹ்… ஹாஹ்”என்று மூச்சிறைத்துக் கொண்டே.. தன் காதல் மனைவியின் உடலிலேயே சாய்ந்தான் அவன். 

அவனுடலில் இருந்த அவஸ்தை தீர்ந்து.. உடல் இலேசாவது போல இருந்தது அவனுக்கு. அவளோ… கணவனின் மீது காதல் பொங்க, அவனது முதுகை ஆசுவாசமாகத் தேற்றிக் கொண்டே…. அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டாள் நந்தினி. 

அடுத்த கணம்.. தரையில் இருந்தவள்.. அவன் மார்பில் அடைக்கலமாகியிருக்க, அவள் மேல் கொண்ட அன்பு தாளாமல்.. அவளது வதனம் எங்கும் ஆயிரம் முத்தமழை பொழிந்து கொண்டே போனான் சத்யன். 

மனைவி உணர்த்திய காதல்.. அவனது உள்ளம் நெகிழ்த்துவதாக இருக்க, அவளை அணுவும் விட்டுப்பிரியாமல்.. கைவளைவுக்குள்ளேயே அணைத்துப் பிடித்திருந்தான் காதல் கணவன். 

அவளுக்கும் கணவனின் வாசம்.. அண்மை.. அந்த ஆண்மைப் பிடி என எல்லாமும் பிடித்திருக்க, அவனது பரந்த மாரில் அங்குமிங்கும் முகம் புரட்டி புரட்டி.. அவனது வியர்வை வாசத்தைத் தன் வதனமெங்கும் தேய்த்துக் கொண்டாள் கள்ளி. 

அவனோ காதோரம், “இந்த உலகத்திலேயே நான் பெருசா நேசிக்குற பெண் கூட நான்.. எப்படியிருக்கு தெரியுமா??”என்று அவன் தன் உணர்ச்சிகள் சொல்ல, அவளுக்குள் புன்னகை மலர்ந்தது.

கணவனின் இதழ்களில் பச்சக்கென்று ஓர் முத்தம் வைத்தவள் “சத்யன் என்னை மன்னிச்சிருங்க.. இனி உங்க மனம் நோகுற மாதிரி ஒருநாளும் நடக்க மாட்டேன்..”என்று அவள் இதயத்திலிருந்து சொல்ல, 

மனைவியின் காதல் நயனங்களையே காதலுடன் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன். 

அந்நேரம் அந்தக்காதல் பார்வைக்கு இடையூறாக செல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தால் அழைப்பெடுத்திருந்தது வேல்பாண்டி. 

அவன் அழைப்பை ஏற்றதும், உச்சபட்ச களேபரத்துடன், “ஹலோ மாப்ள.. தங்கச்சி கிடைச்சாளா மாப்ள”என்று கேட்க, இவனோ அவளது இதழ்களை வருடியவனாக, “ஆமா என் கூட தான் இருக்கா.. நானும் யௌவனாவும் வீட்டுக்கு வர்றோம்”என்றவனாக.. அழைப்பைத் துண்டித்தவன், 

மனைவியிடமிருந்து பச்சை சிக்னல் கிடைத்த பின்னாடி.. அடுத்த இன்னிங்ஸ்ஸை வீட்டில் சென்ற தொடர நாடி.. அவளை ஆடை அணிந்து கொள்ளச் சொன்னான் சத்யன். 

சத்யனின் வதனம்.. அன்றிரவு.. அந்த சந்திரவதனத்தை நிகர்த்திருந்தது அகமகிழ்வினால். 

அந்தப் பொல்லாத நந்தினி வருவாளா? இல்லை ஆள் அண்டா காடே தஞ்சமென ஆகிப் போகுமா??