எனக்கென வந்த தேவதையே 16

அத்தியாயம்16

 வஞ்சி இரவு 9:30 மணி அளவில் சென்னை பேருந்து நிலையம் வந்து இறங்கினாள். ஆகாஷ் சொன்னது போலவே தன் தாயுடன் நின்று கொண்டிருந்தான். 

 வஞ்சியை கண்டதும் கை அசைத் தவன், அவளிடம் சென்று, அவள் பையை வாங்கிக்கொண்டு வாங்க இளவஞ்சி வீட்டுக்கு போகலாம். என்றவன் தன் தாயை அவளிடம் அறிமுகம் செய்து வைத்தான். 

வீட்டிலேயே புவனாவிடம் சொல்லி அழைத்து வந்ததால் புவனமாவும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை 

 ஆகாஷ், வண்டியை ஓட்டிக்கொ ண்டே, வஞ்சி யாருடைய நம்பர் ல இருந்து நீங்க போன் பண்ணீங்க என கேட்டான்.

 வஞ்சி,அது.. என் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு சார். அதனால.. பக்கத்துல, உக்காந்து… இருந்து அம்மாகிட்ட கேட்டு வாங்கி பண் ணினேன், என்றாள்.

 ஆகாஷ், ஓ அப்படியா என்றவன் சாப்டீங்களா என்றான். அவள், எதுவும் சொல்லாமல் அமைதியாக தலை குனிந்து கொண்டாள்.

 ஆகாஷ், நேராக ஒரு ஹோட்டலில் சென்று இறங்கி  இரவு உணவை அனைவருக்கும் வாங்கி கொண் டான்.

இரவு,பத்துமுப்பது மணி அளவில் வீடு வந்து சேர்ந்தனர் மூவரும்.

ஆகாஷ், அவளுக்கு,  ஒரு அறை யை காட்டியவன் வஞ்சி… இப்ப இங்க தங்கிக்கோங்க.. நாளைக்கு எதுனாலும் மாத்திக்கலாம் என்றவன், 

 வாங்கி வந்த உணவை அவளிடம் கொடுத்து விட்டு, மறக்காம சாப்பி டுங்க…., நான் அம்மாவ பாக்க போறேன் என்றவன் கதவருகே சென்றான். 

 வஞ்சி, உடனே ரொம்ப தேங்க்ஸ் ஆகாஷ் சார், இந்த உதவியை நான் என்னைக்கும், மறக்க மாட்டேன் என்று கை கூப்பினாள். 

 ஆகாஷ் சிரித்தவன், சென்று விட்டான் நடந்ததை எண்ணியவ ளுக்கு, தூக்கம் தூரம் போனது. எப்போது உறங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை.

 இங்கே, கம்பத்தில் ஈஸ்வருக்கும் தூக்கம் தூரம் போனது. 

சென்னையில் காலை சூரியன் கிழக்கே உதித்து விட்டான். பங்கு னி, வெயில் பல்லை காட்டியது. காலையிலேயே ஆகாஷ் அவள் அறையின் கதவை தட்டினான்.

 சத்தம், கேட்டு அறைக்கதவை திறந்தவள், முதலில் ஆகாஷ்யை பார்த்து அதிர்ச்சியானாள். பின்,  நேற்று இங்கு வந்தது ஞாபகம் வந்ததும், வாங்க சார் என்றாள் அமைதியாக, 

ஆகாஷ், உள்ளே வராமல் இருக்கட் டும்,வஞ்சி நைட் நல்லா தூங்குனீ ங்களா மணி எட்டு ஆச்சு இன்னும் எந்திரிக்கலையேன்னு…. எழுப்ப வந்தேன். டயர்டா இருந்தா இன்னு ம், கொஞ்ச நேரம் தூங்கிக்கோங்க என்றான்.

 வஞ்சி,இல்ல இதுவே ரொம்பநேரம் தூங்கிட்டேன் என்றவள் அவனை ப்பார்த்து அது வந்து  நான் பிரஷ் பண்ணனும் சார் என்றாள். 

 ஆகாஷ், அச்சோ மறந்துட்டேன் பாருங்க, இந்தாங்க பிடிங்க இப் போதைக்கு இதை அட்ஜஸ்ட் பண் ணிக்கோங்க. ஈவினிங் ஷாப்பிங் போய் தேவையானதை வாங்கிக்க லாம் என்றான். அவளும் சரி என தலையாட்டி உள்ளே சென்று விட்டாள். 

கம்பத்தில் தன் தோட்டத்து வீட்டில் இருந்து சுந்தரம் நேரே சுருளிப்பட்  டிக்கு சென்றார். காலையிலேயே தன் அண்ணன் வந்ததும் அதிர்ந்த முகத்துடன் அழகம்மை அவரை பார்த்தார்

சுந்தரம்,அழகுமா…. கொஞ்சம் தண்ணி கொண்டு வா என்றார். 

 அழகம்மை, தன் அண்ணனுக்கு தண்ணீர் கொண்டு வந்து  கொடுத் தவர்,என்ன அண்ணா காலையில் இந்த பக்கம் வந்து இருக்கீங்க.. என்றார்.

சுந்தரம் அழகுமா, வஞ்சி…  இங்க தானே இருக்கா கொஞ்சம் கூப்பிடு றியா?அவகிட்டகொஞ்சம் பேசனு ம் என்றார். 

 உடனே, அழகு என்ன அண்ணா சொல்றீங்க?! வஞ்சி இங்க வரவே இல்லையே!? என்ன அண்ணா அங்க.. ஏதாவது.. பிரச்சனையா? என்னங்க கொஞ்சம் இங்க வாங்க என்றார் சத்தமாய்…

 இதைக்கேட்டதும்,சுந்தம் பயத்தில் கண் கலங்கி விட்டார்

அழகு, அண்ணா..! என்ன ஆச்சு என் பொண்ணுக்கு, என்னஎன்ன பண்ணீங்க….,என் பொண்ணு….    இங்க வரவே…. இல்லையே…  என்றார்.

 சுந்தரம், பெரியவளுக்கு போன் போட்டு கேளுமா..அங்க எதுனா போயிருக்காளானு என்றார் குரல் தழுதழுக்க..

அழகு, அண்ணா!…. இப்ப தான் பெரியவளுக்கு போன் போட்டு பேசியிருந்தேன்.வஞ்சி அங்கவந்து இருந்தா, என்கிட்ட சொல்லி இருப் பாலே.. மறைக்காம என அங்கலா யித்தார்.

சந்தானம் உடனே,என்ன ஆச்சுங்க ஏதாவது பிரச்சனையா? அங்க.. என்றவர், அவள் போனுக்கு கால் செய்தார்.போன் சுவிட்ச் ஆஃப் என வந்தது.

 சந்தானம்,ஐயையோ!என் பொண் ணு..நம்பர் சுவிட்ச் ஆஃப்  பண்ணி வச்சிருக்காலே, என்ன நடந்ததுன் னு சொல்லுங்க..இல்லனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண் ணுவேன் என்றார் ஆத்திரத்துடன் ஒரு பெண்ணின் தகப்பனாய்,

 சுந்தரம் நடந்ததை மேலோட்டமாக சொன்னார். 

அழகு தலையில், அடித்துகொண்ட வர்,ஐயோ! போச்சு நான் அப்பவே சொன்னேன்,  என் பொண்ணு என் கூடவே, இருக்கட்டும்னு.. நீ தான் நான் வாழ வைக்கிறேன் கூட்டிட்டு போன…, இப்ப என் பொண்ண… தொலைச்சிட்டு நிக்கிறியே,கஷ்டப் பட்டாலும்,என் பொண்ணுங்கல  ராணி மாதிரி தான் வளர்த்தேன். எதுக்காக, பயந்தேனோ அது இப்ப நடந்துருச்சு.. என தலையில் அடித் துக் கொண்டு அழுதார். 

சுந்தரம், சாந்தா எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு எப்படியாவது வஞ்சிய கண்டுபிடிச்சு…, கொடுத்தி டுறேன் என்னை நம்பு என கண் கலங்கினார்.

உடனே, அழகு ஓடிவந்து…சுந்தரத் தை கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென அழுதவர்,,

 அண்ணா!?…, என் பொண்ணுக்கு ஒன்னும் ஆகி இருக்காது இல்ல.. என் பொண்ணுக்கு…, ஒன்னும் தெரியாது ணா,குழந்தை மாதிரியே வளர்த்துட்டேன் என் பொண்ணுங் கள, என அழுதாள். எங்க போய் கஷ்டப்படுறாளோ தெரியலையே என அங்கலாயித்தார் .

 சுந்தரம்,அழகமையும் சந்தானமும் அழுவதை பார்த்தவர், ஈஸ்வர் மேலும் கனகாவின் மேலும் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.  கைக ளை இறுக…  மூடிக்கொண்டார் கோபத்தை கட்டுப்படுத்திக்கொ ண்டு… 

 சுந்தரமும், கண் கலங்கியவர் ஒன்னும் ஆகாதும்மா வஞ்சிக்கு. நீ கவலைப்படாத…  எப்படியாவது அவளை நான் கண்டுபிடிச்சு கூட்டிட்டு வந்துடுவேன் என்றார் அவர் தலையை தடவி கொடுத்து, 

 சந்தானம் இப்ப என்ன பண்றது என் பொண்ண கண்டு பிடிக்க.. வேற வழியே இல்லையா? என அவரும் கண்கலங்கினார். 

 சுந்தரம், உடனே எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு.. சந்தானம். வஞ்சி கிடைக்கலன்னா.. நானே உன் கூட வரேன் கம்ப்ளைன்ட் கொடுக்க என்றவர் தள்ளாட்டமா ய்… வீடு வந்து சேர்ந்தார். 

 இங்கே,  ஒரு மாதம் ஆகியும் வஞ்சியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

 அழகமையும் சந்தானமும் அழுது கொண்டே இருந்தனர். சுந்தரம் தான் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

 வஞ்சி, சென்னைக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. புவனாம்மா வுடன், பேச ஆரம்பித்திருந்தாள் நன்றாக, காலை கார்டனில் மூவரு ம், அமர்ந்து டீ அருந்தி கொண்டிரு ந்தனர்.

 அப்போது, ஆகாஷ், வஞ்சி… என் றவன் அவள் கையில் ஒரு கவரை கொடுத்தான்.  வஞ்சி அதைப்பிரித் துப் பார்த்தாள்.அதில் ஒருகவரில் பிரைவேட் ஸ்கூலில் டீச்சராக அப்பாயிண்ட் செய்த கடிதம் இருந்தது.

அதை,பிரித்துப்பார்த்த வஞ்சியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அவள் முகம் பிரகாசித்தது. அவள் ஏதோ ஒரு வேலை தான் கேட்டாள் ஆனால்.. அவள் செய்த டீச்சர் வேலையே வாங்கி தந்து விட்டான். வஞ்சியின் கண்களில் ஆனந்த கண்ணீர். 

ஆகாஷை கையெடுத்து கும்பிட்ட வள்,ரொம்ப..தேங்க்ஸ் ஆகாஷ்சார் இதுக்கெல்லாம் நான் என்ன கை மாறு உங்களுக்கு செய்யப்போறே ன்னு.. தெரியலை என்றாள்.

ஆகாஷ் சிரித்தவன், டீச்சரம்மா.. ஃபர்ஸ்ட் சேலரி வாங்கியதும், ட்ரீட் வச்சிடுங்க.. அதுவும் உங்க கையா ல… சமைச்சு என்றான் சிரிப்புடன் 

 அவன் அப்படி கூறியதும் லேசாக சிரித்த, வஞ்சி சமையல் தானே பண்ணிட்டா போச்சு….

ஆனா..  இப்ப உங்க ரெண்டு பேருக்கும், என் கையாள ஸ்வீட் பண்ணி தர போறேன். இந்த சந்தோஷத்தை கொண்டாட என்றவள், 

சமையலறைக்குள் சென்று இருவருக்கும் பாதாம் அல்வா செய்து கொடுத்தாள்.

ஒரு நல்ல நாளில் முகப்பேரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்து கொண்டாள். 

 மனதில்,ஆயிரம் கவலைகள் இரு ந்தாலும்,பள்ளி பிள்ளைகளை பார்த்ததும்….,மனதில் உள்ள  கவ லையெல்லாம், லேசானது போல் இருந்தது வஞ்சிக்கு, அடிக்கடி தலைசுற்றல் மயக்கம் என இருந்த து. உடல் சோர்வு நினைத்துக் கொண்டாள். 

ஒருநாள் பாடம் எடுத்துக் கொண் டிருக்கும் போதே வகுப்பறையில் மயங்கி விழுந்தாள். அவளை மரு த்துவமனையில் சேர்த்து விட்டு ஆகாஷுக்கு தகவல் சொன்னார்க ள்.

ஆகாஷ் தன் தாயைக் கூட்டிக்கொ ண்டு அடித்துப் பிடித்து, மருத்துவ மனை, வந்து சேர்ந்தான். வஞ்சி அங்கு அழுது கொண்டு இருந்தா ள். 

புவனாம்மா தான்அவள் அருகில் அமர்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். 

ஆகாஷ்,மற்ற தகவல்களை டாக்ட ரிடம்,கேட்டு,தெரிந்துகொண்டான்.வஞ்சி மூன்றரை மாதம் முழுகா மல் இருந்தாள்.

 ஆகாஷ், சத்து, மாத்திரை டானிக் பழங்கள் என வாங்கிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்தான் அவளை.

 

தொடரும்..