உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஆறு

உறவே உயிரே பிரியாதே – அத்தியாயம் ஆறு

ஸ்ரீராம் காலை 4 மணிக்கு எழுந்து அப்பாவுடன் சிவா பூஜையில் கழுத்து கொண்டான். அம்மா, தங்கை , தாத்தா பட்டி என அனைவரும் இந்த பூஜையில் கழுத்து கொண்டனர்.

பூஜையில் நிறய நேரம் ஸ்லோகங்கள் , மந்திரங்கள் சொன்னார் . சுமார் 6 மணிக்கு பூஜை முடித்தார். பிறகு ஒரு சுருக்கு பையில் போட்டு வைத்து இருந்த சோழிகளை வெளியில் எடுத்தார். 12 சோழிகள்.

ஸ்டார் வரைந்து வைத்து இருந்த ஒரு மரப்பலகையில் அதனை போட்டார்.
5 சோழிகள் ஒரு கட்டத்துக்குள் (கடல் என்று எழுதி இருந்த ) இருந்தன. மீதம் வெளியில் கிடந்தன.

இதே போல மூன்று முறை போட்டார் . அதே ஐந்து சோழிகள் விழுந்தன. வேறு விதமான கட்டங்களில் .. திருமண கட்டத்திலும் , காரிய அனுகூலம் என்ற கட்டத்திலும்

ஏதோ கணக்கு போட்டு பார்த்தார் அன்றைய திதி , தசா புத்தி , நட்சத்திர பிறக்கும் நேரம் எல்லாம் வைத்து.

பிறகு அனைவரையும் அழைத்தார். உத்தரவு கிடைத்து விட்டது . அமெரிக்கா ( ஐந்து எழுத்து ) – திருமணம் (ஐந்து எழுத்து) – செல்லலாம் (ஐந்து எழுத்து) .

“அமெரிக்கா விற்கு திருமணம் செய்து கொண்டு செல்லலாம் என உத்தரவு கிடைத்து உள்ளது.” என்றார்.

“அப்பா நான் இன்று முடிவு சொல்லி ஆக வேண்டும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் விசா வந்து விடும். எப்படி திருமணம் பற்றி அதற்குள் திருமணம் பற்றி முடிவு எடுக்க முடியும் ” என கேட்டான்.

அம்மா உடனே ” திருமணம் என்பது ஆற அமர பெண் பார்த்து விசாரித்து செய்ய வேண்டிய ஒரு நிகழ்வு. அதை இப்படி அவசரமாக செய்ய முடியாது.” என கூற ..

இது தான் தெய்வத்தின் உத்தரவு. என்றார் அப்பா சிவக்கொழுந்து

தாத்தா சிவநேசன் ” நம் ஜோஷியரிடம் ஸ்ரீராமின் ஜாதகத்தை காண்பித்து வர வைத்தீஸ்வரன் கோயில் சென்று இருந்தேன் அல்லவா..
அவரிடம் ஏதும் வரன்கள் கைவசம் உள்ளதா என கேட்டு பார்ப்போமே என்று சொல்லிவிட்டு ஜோசியரை கைபேசியில் அழைத்து கேட்டார்.

ஜோசியர் “ஸ்ரீராமின் ஜாதகம் என்னிடம் இருக்கிறது .. சில வரன்கள் இருக்கின்றன. பொருத்தமான சில ஜாதகங்களுடன் நான் நாளை காலை சென்னை உங்கள் வீட்டுக்கே வருகிறேன்” என கூறி போனை வைத்தார்.

தாத்தா தான் மகன் சிவக்கொழுந்துவிடம் ” நாளை ஜோசியர் வரட்டும் பேசிக்கொள்வோம் ” என்றார்

ஸ்ரீராம் உடனே தீபிகாவிடம் கைபேசியில் அழைத்து வீட்டில் நடந்த அனைத்தையும் கூறி ஜோசியர் சில வரன்களுடன் வருவதாக கூறி உள்ளார். நாம் இப்போது என்ன செய்வது” என்றான்

மேலும் “வேறு யாரோ ஒரு பெண்ணோடு திருமணத்தை முடித்துவிட போகிறார்கள் . அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் தீபிகா”. என்றான்.

இரு அம்மாவிடம் யோசனை கேட்கிறேன் என்றாள்.

அம்மாவிடம் தீபிகா விவரத்தை கூற , அம்மா பார்வதி ஓ வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியர் தானே .. எனக்கு அவரை நன்றக தெரியும். இருங்கள் அவரிடம் பேசி ஏதாவது செய்யலாம் என ஜோசியரை கைபேசியில் அழைத்தாள்.

ஜோசியரிடம் ” ஐயா எனக்கு ஒரு ஜாதகம் வந்தது ஸ்ரீராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வரன் .” அவனுடைய ஜாதகம் நான் அனுப்புகிறேன் , நீங்கள் பொருத்தம் பார்த்து சொல்ல முடியுமா என கேட்டாள்”..

ஜோசியர் உடனே ” என்னிடம் ஸ்ரீராம் ஜாதகமும் இருக்கு , உங்கள் பெண்ணின் ஜாதகமும் இருக்கு .. ” நீங்க இரண்டு பெரும் என்னிடம் தான் ஜோசியம் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். மேலும் ஸ்ரீராமின் குடும்பம் என்னை அழைத்து அவரசமாக ஒரு வரன் வேண்டும் உடனே திருமணம் முடிக்க என கேட்டார்கள். நீங்களும் இதே போல கேட்கிறீர்கள். ” நல்லதாய் போயிற்று . இருங்கள் நானே பொருத்தம் பார்த்து சொல்லுகிறேன் . ” என்று போனை வைத்தார்.

ஐயா எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி வைத்து விடுங்கள்.

“ஏன் அம்மா இப்படி கேட்கிறீர்கள். இந்த வரன் இல்லாவிட்டால் என்ன வேறு வாரங்களே இல்லையா என்ன ..

“ஸ்ரீராம் எனக்கு தெரிந்த பையன், அதனால் அவன் குண நலன்களை நான் அறிவேன். எனவே தான் இதை முடியுங்கள் என கூறினேன்” என்றாள்

சரியம்மா .. நான் முதலில் பொருத்தம் பார்த்து விடுகிறேன். பொருந்தினால் நானே முதல் வரனாக உங்கள் பெண்ணின் ஜாதகத்தை அவர்களிடம் காண்பிக்கிறேன்.. என்றார்..

சில மணி நேரங்கள் கழித்து ஜோசியர் பார்வதியை அழைத்து , ” பொருத்தம் நன்றாக உள்ளது செய்யலாம் ” என கூறினார்.

உடனே அம்மா ஜோஷியரிடம் ” ஐய்யா எனக்காக ஒரு உதவி நீங்கள் செய்ய வேண்டும் . ” என்றாள்.

என்ன உதவி ” என்றார் ஜோசியர்

“இந்த தீபிகாவும் ஸ்ரீராமும் நெருங்கி பழகுகிறார்கள் . ஸ்ரீராம் உங்களை அழைத்து இதை பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியதாகவும் ,ஆனால் பெண்ணின் அம்மா அப்பா சம்மதிக்க வில்லை ” என்றும் நீங்கள் கூற வேண்டும். மேலும் பெண் வீட்டை விட்டு வது விட்டாள். பெங்களூரு ஹோஸ்டேலில் இருக்கிறான் என கூற வேண்டும் ” என்றாள்.

இந்த பொய் பித்தலாட்டம் எல்லாம் எதற்காக .. நீங்கள் தான் தீபிகாவுக்கு ஸ்ரீராமை திருமணம் செய்து தர கேட்கிறீர்கள். நீங்களே ஸ்ரீராமின் பெற்றோரிடம் கூறலாமே என்றார் ..

ஜோஷியரிடம் “எல்லாம் ஒரு காரணத்துக்காக தான்” நான் தான் பெற்றோர் என்றால் ஒரு வேலை அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.” எனக்கும் அவர்களுக்கும் நீண்ட கால பிணக்கு இருக்கிறது ஐயா ..என்றாள்

ஓ .. அப்படியா .. அப்போ இதெல்லாம் சரிப்பட்டு வராது அம்மா .. சிவா கொழுந்து என் நீண்டகால நண்பர். அவருக்கு துரோகம் செய்ய மாட்டேன். என்று மறுத்து பேசினார்.. ஜோசியர்

சரி ஐயா .. அப்போ இது வேண்டாம் .. விட்டு விடுங்கள்.. நடப்பது நடக்கட்டும் .. என்றாள் பார்வதி.

“நான் என்னை நம்பியவர்களுக்கு எப்போதும் உண்மயானவனாக இருக்கவே விருபுகிறேன். நீங்கள் தான் பெற்றோர் என கூறி உங்கள் பெண்ணின் ஜாதகத்தை அவர்களிடம் கொடுக்கலாம் அல்லவா ” என்றார் .

அப்படி வேண்டாம் ஐயா விட்டு விடுங்கள் . நீங்கள் உங்கள் வேலையை பாருங்க, நான் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன். என்றாள்.

“தீபிகா எல்லாவற்றையும் நீ மறந்து விட்டு உன் வேலையை பார். நீ அமெரிக்கா கிளம்பி விடு. யார் துணையும் தேவை இல்லை. நீ தன் துணிச்சலான பெண்ணாயிற்றே .. ” என்றாள்.

தீபிகா ஸ்ரீராமை அழைத்து ஜோசியருடன் தான் அம்மா பேசியதையும் கடைசியில் அம்மாவின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதையும் சொன்னாள்.

சரி தீபிகா. நீ கவலை படாதே. நான் உன்னுடன் டிபண்டன்ட் ஆக வர தயாராக இருக்கிறேன். நீ என்னுடைய பாஸ்போர்ட் விவரங்களை உன் நிறுவனத்துக்கு விசா ப்ராசஸிங் காக கொடுத்து விடு. நடப்பது நடக்கட்டும். எதுவும் முடியவில்லை என்றால் நான் வீட்டில் லெட்டர் எழுதி வைத்து விட்டு உன்னுடன் அமெரிக்கா வந்து விடுகிறேன்.

“உன் வீட்டில் கஷ்டப்படுவார்கள் ” என்றாள் தீபிகா.

வேறு வழி இல்லை. நீ சொன்னது போல பெங்களுருவில் பதிவு திருமணத்துக்கு ஏற்பாடு செய். அப்போது தான் டிபண்டன்ட் விசா கிடைக்கும்” என்றான்.

தீபிகா சந்தோச பட்டாள்.

ஸ்ரீராம் வீடு ..

மறுநாள் காலை மணி பத்து.

ஜோசியர் சில பொருத்தமான வரன்களை கொடுத்து விட்டு போனார். பிள்ளையிடம் எந்த பெண் பிடித்து இருக்கு என கேட்டு சொல்லுங்கள் மேற்கொண்டு பேசலாம் என சொன்னார்.

அப்பாவும் அம்மாவும் ஒரு பெண்ணை தேர்வு செய்து வித்து விட்டார்கள்.
இருந்தாலும் அவனது ஒப்புதல் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது.

ஸ்ரீராம் எந்த பெண்னும் பிடிக்கவில்லை என்று ஏதோ வேண்டுமென்ற காரணங்களை அடுக்கினான்.

மீதும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம் ..